பூக்கள் எத்தனை
பூக்கள் எத்தனை
பூப்பூவாய்ப் பூத்திருக்கிறது
அழகு ரோசாத் தோட்டம்
துள்ளி வந்த அல்லி
அத்தனைப் பூக்களையும் பறித்தாள்
கூடையில் எடுத்துப் போட்டாள்
கிடுகிடுவென நடந்தாள்
சின்னத் தங்கை நிலாவிடம்
மூன்று பூக்களைத் தந்தாள்
அன்புத் தோழி குயிலியிடம்
ஐந்து பூக்கள் அளித்தாள்
நான்கு பூக்களை எடுத்து
தலையில் சூடிக் கொண்டாள்
ஆறு பூக்களை அள்ளி
ஆற்றில் மிதக்க விட்டாள்
கூடைக்குள் கையைவிட்டுத்
துழாவித் துழாவிப் பார்த்தாள்
கையில் பூக்கள் கிடைக்காததால்
கையைக் கையை விரித்தாள்
அல்லி பறித்த பூக்கள் எத்தனை
அறிந்தோர் சொல்லிச் செல்லுவீர்!
Comments
Post a Comment