தை பிறந்தால் வழிப் பிறக்கும்
தை பிறந்தால் வழி பிறக்கும்
"தை பிறந்தால் வழி பிறக்கும்.,"
இது தமிழரின் பண்பாட்டைப் சொல்ல வந்த ஒரு பழமொழி.
ஓர் எதிர்பார்ப்போடு
நம்பிக்கையோடு பிறப்பது தை மாதம்.
தை மாதம் அதுவரை செய்து வந்த உழைப்புக்கான பலனைப் பெறும் மாதம். வீட்டில் நல்லது நடக்கும் மாதம்.
புதிய நல்ல காரியங்கள் நடைபெறும் மாதம்.
இதுவரை இருந்த தடைகள் நீங்கி இனி நடப்பவை யாவும் நன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு பிறக்கும் மாதம்.
மார்கழி மாதத்தில் அறுவடை முடிந்து, தை மாதத்தில் உழவர்களின் கையில்
நல்ல வருமானம் வருவதால் வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும் .
பொருளாதார மந்தநிலை மாறி கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும் மாதமாக இருக்கும். பொருளாதார நிலை உயர்வதால் பூரிப்புடன் நடைபோட வந்த மாதம்.
மார்கழி மாதக் குளிர் நீங்கிவிடும் .
பனிப் பொழிவு இல்லாத தெளிவான
வானம் காணப்படும்.
இந்தச் சூழலால்
எதிர்வரும் நாட்கள் எந்தத் தடையும் இல்லாத நாட்களாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் பிறக்கும்.
தை மாதத்தில் அறுவடை முடிந்து
புதுநெல் வந்துவிடுகிறது.
புது அரிசியில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்குப் படைத்து குலவையிட்டு, "பொங்கலோ பொங்கல்" என
குரல் எழுப்பும்போது மங்களங்கள் பெருகும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
பொங்கல் உழவர்களுக்கான நாள்.
தங்கள் உழைப்பின் பலனைப் பெற்ற பூரிப்பில் கொண்டாடப்படும் ஒரு நாள்.
கரும்புபோடு களைகட்டும் நாள்.
மங்களகரமான மஞ்சளோடு
மலர்ந்து நிற்கும் நாள்.
பிறந்த இந்தத் தைமாதம் தமிழர் இல்லங்களில்
பொருளாதார ஏற்றம் காணட்டும்
மகிழ்ச்சி இல்லத்திலும் உள்ளத்திலும் நிறைந்திடட்டும்.
இதுவரை இருந்த தடைகள் நீங்கி நல்வழி பிறத்திடட்டும்.
இனியது நடக்கட்டும் .
உழைப்பால் கிடைத்த மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
" தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்"
என்ற உங்கள் நம்பிக்கை நிறைவேற
வந்த மாதமாக இந்தத் தை மாதம் இருக்க வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment