விளையாடலாம் வா
விளையாட வா
சின்னப் பெண்ணே பாரதி
சேர்ந்து விளையாடலாம் ஓடி வா!
அன்புத் தம்பி சாரதியோடு
ஆடிப் பாடிக் களிக்க வா
சேவற்கோழி போலவே
கூவி எம்மை எழுப்ப வா
பச்சைக் கிளியைப் போலவே
தத்தித் தத்திப் பேசி வா
மயிலைப் போல ஆடியே
அகவல் ஒலி எழுப்பி வா
குயிலைப் போல பாடியே
குக்கூ என்று கூவி வா
கத்தும் தவளைப் போலவே
தத்தித் தத்தித் தாவி வா
குரைக்கும் நாயைப் போலவே
வாலை வாலை ஆட்டி வா
பிளிரும் யானை போலவே
ஒற்றைக் கையை ஆட்டி வா
கர்ச்சிக்கும் சிங்கம் வருகிறது
ஒளிந்து கொள்வோம் விரைந்து வா!
Comments
Post a Comment