காக்கை கரவா கரைந்துண்ணும்....

  காக்கை கரவா கரைந்துண்ணும்....


"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள "

                      குறள்   : 527

காக்கை - காகம்
கரவா - மறைக்காது 
கரைந்து - கூவி அழைத்து
உண்ணும் - தின்னும்
ஆக்கமும் - உயர்வும் , பெருக்கமும்
அன்ன - அதுபோன்ற
நீரார்க்கே - தன்மையுடையவர்க்கே
உள - உண்டாகும், இருக்கும்.


காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல்
தன் இனத்தைக் கூவி அழைத்து
 உடனிருந்தே உண்ணும்.
அத்தகைய பண்பு கொண்டவர்களோடு மட்டுமே
 சுற்றம் கூடி இருக்கும்.


விளக்கம் :

தனக்கு வளமான வாழ்க்கை வாய்த்தபோது
சுற்றத்தை மறந்துவிடக் கூடாது.
அவர்களையும் அழைத்து அவர்களுக்கும்
கொடுத்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்.
இன்சொல் பேசி நம்மோடு எப்போதும்
ஒரு இணக்கமாக இருக்கும் சூழ்நிலையை
உருவாக்கிவிட வேண்டும்.
தம்மிடம்  செல்வம் வந்து சேரும்போது
உறவுகளோடு பகிர்ந்து உண்ணும்
பண்பு வர வேண்டும்.

அன்னநீர்மை கொண்டவர்  என்பவர் யார் ?
 ஒரு பருக்கை கிடைத்தாலும் 
கா.. கா...என்று தன் உறவுகளை அழைத்து
கூடி இருந்து உண்ணும் காக்கையைப் போல...
இருப்பதை உறவுகளோடு கூடி பகிர்ந்து 
உண்ணும் பண்பு கொண்டவர்கள்களை திருவள்ளுவர்
அன்ன நீர்மை கொண்டவர் என்று
காக்கையோடு ஒப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட தன்மை கொண்டவர்களோடு
சுற்றமும் நட்பும் கூடி இருக்கும்.
அவர்கள் வாழ்க்கையில் மட்டுமே 
நிறைவான ஆக்கம் உண்டாகும்.
அதாவது வளர்ச்சி, 
ஆள் பலம், செல்வ பெருக்கம், முன்னேற்றம்
என்று எல்லாவிதத்திலும் ஒரு
மேன்மை வந்தடையும்.
ஒற்றுமை உணர்வு உள்ளத்தில் இருக்கும்
குடும்பங்களுக்கு மட்டுமே சமூகத்தில்
உரிய மரியாதை கிடைக்கும்.
காக்கையைப் போன்று பகிர்ந்து
உண்ணும் பண்பு இருந்தால் மட்டுமே
வளர்ச்சி உண்டு என்பது வள்ளுவர் கருத்து.

English couplet :

"The crows conceal not, call their friends to come, then eat,
Increase of good such worthy ones  shall meet."

Explanation : 

The crows do not conceal  their prey , but will call out 
for others to share with them  while they eat it , wealth
Will be with those who show a similar disposition
(towards their relatives .)

Transliteration : 

"Kaakkai karavaa karaindhunnum Aakkamum
Annanee Raarkke ula "

Comments

Popular Posts