சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க....

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க....

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் "

                             குறள் : 827

சொல் -  மொழி
வணக்கம் - பணிவு
ஒன்னார்கண் _ பகைவரிடத்தில்
கொள்ளற்க - கொள்ளாதிருப்பீராக
வில் - வில்போன்ற 
வணக்கம் - பணிவு
தீங்கு - தீமை
குறித்தமையான் _ கருதியமையான்


வில்லானது வணக்கம் செய்வதுபோல் வளைந்து 
இருந்தாலும் தீங்கு செய்தலே அதன் செயலாக
இருக்கும்.
அதுபோல பகைவர் பேச்சில் பணிவு இருப்பதுபோல்
இருந்தாலும் அது நமக்கு நன்மை தரும்
என்று எண்ணிவிடக் கூடாது.

விளக்கம் :

வில் வளைந்து வணங்குவது போன்ற
தோற்றம் கொண்டதாகத்தான் இருக்கும்.
அதற்காக வில்லிலிருந்து 
புறப்படும் அம்பு எவ்வுயிருக்கும் தீங்கு
செய்யாது என எதிர்பார்ப்பது மதியீனம்.

தோற்றம் வணங்குவதுபோல் இருந்தாலும்
வில் எய்தப்படுவதன் நோக்கம் பிற 
உயிர்களை வீழ்த்துவதற்காகத்தான் இருக்கும்.

அதுபோல பகைவன் வாயிலிருந்து வரும்
சொற்கள் இனிமை தருவதாக இருக்கலாம்.
கூனிக்குறுகி வணங்கி பணிவாகப் பேசலாம்.
ஆனால் அது ஒருபோதும் நமக்கு நன்மை 
தருவதாக இருக்காது.

பகைவனின் நோக்கம் நம்மை
 வீழ்த்துவதாகவே இருக்கும்.
 எண்ணம் தீயதாக இருக்கும்போது வணக்கத்தில்
 பணிவு இருக்கும் என்று  நினைக்கலாமா? 
 பேச்சில் உண்மை இருக்கும் என்று 
 எதிர் பார்க்கலாமா ?
 
பகைவன் எப்போதும் பகைவன்தான்.
அடிபட்ட பாம்பு கடிக்காமல் விடாது
என்பதுபோல ஏதோ ஒரு காரணத்திற்காக
நம்மோடு பகைமை கொண்டவர் எப்போதும்
நம்மை வீழ்த்துவதிலேயே குறியாக
இருப்பர் என்பதை நினைவில் வைத்துக்
கொண்டு கவனமாக இருங்கள் என்கிறார்
வள்ளுவர்.


English couplet : 

"To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near!"

Explanation : 

Since the bending of the bow be speaks evil, one 
Should not accept  the humilating speeches of one's foes.

Transliteration : 

"Solvanakkam onnarkan kollarka vilvanakkam
Theengu kuriththamai yaan "

 
 Comments

Popular Posts