நிழல்நீரும் இன்னாத இன்னா....

  நிழல்நீரும் இன்னாத இன்னா...


"நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாஆம் இன்னா செயின்"

                           குறள் : 881

நிழல் -  நிழல்
நீர்  -       தண்ணீர்
இன்னாத - தீங்கு செய்தால்
இன்னா - தீயவையாம்
தமர் - சுற்றத்தார், உறவினர்
நீரும் - நீர்மை இயல்பும்
இன்னாவாம் - தீயனவாம்
இன்னா - துன்பம்
செயின் - செய்தால்

நிழலில் கிடக்கும் நீர் துன்பம் தரும்

 தன்மை கொண்டதாக மாறினால்

அதனை அருந்துவது தீங்கை

விளைவிப்பதாகவே இருக்கும்.

அதுபோல உறவினர் உட்பகை

கொண்டவராக இருந்தால் அவர்களால்

துன்பமே வந்து சேரும்.

விளக்கம் :

நிழலில் கிடக்கும் நீர் முதலில்

குளிர்ச்சியாக  இருக்கும். 

அருந்தி ஆனந்திப்போம். 

பலநாள் அப்படியே நிழலில் கிடக்கும்

நீரில் புழுக்கள் தோன்றி குடிப்பதற்கு

லாயக்கற்ற நீராக மாறிவிடும்.

முதலில் இனிமை தந்த நீரல்லவா?

அப்படி என்ன தீங்கு விளைவித்துவிடப்

போகிறது என்று அருந்தினால் நோய்வாய்ப்பட

நேரிடும்.

 இனிமை தந்த நீர் காலப்போக்கில்

நோய் கொடுக்கும் நீராக மாறிவிட்டது.

இது நிழலில் கிடக்கும்

 நீருக்கான தன்மை.


அதுபோல சுற்றத்தார் முதலில்

இனிமையாகப் பேசியிருப்பர்.

அதற்காக அவர் என்றும் இனிய பண்பு

கொண்டவராக இருப்பார் என்று

நினைக்க வேண்டாம்..

நாளாக ஆக அவருடைய செயலில்

சில மாறுபாடுகள் ஏற்பட 

வாய்ப்பு உண்டு .

மனதிற்குள் பகைமை உணர்வை

வளர்த்துக் கொண்டவராக மாறியிருக்கலாம்.

அது அவரின் செயலில் வெளிப்படும்.


அதாவது உட்பகை கொண்டவரின் செயல்

நோய்போல நம்மோடிருந்து நம்மை

கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

நிழல்நீர் எப்போது நச்சுத் தன்மை

 கொண்டதாக மாறிவிடுகிறதோ 

அப்போதே அதனைத்

தவிர்த்து விடுவது நன்று.
.
எப்போது உறவினரின்

செயலில் மாறுபாடு தென்படுகிறதோ

அப்போதே அவருடைய உறவிலிருந்து

விலகிவிடுவது நமக்கு  நலம் பயப்பதாக

இருக்கும் என்கிறார் வள்ளுவர்.


நிழல்நீர் என்பது நிழலும் நீரும் என்றும்

பொருள் கொள்ளலாம்,நிழலில் இருக்கும் நீர்

அதாவது குளிர்ந்தநீர் என்றும் பொருள் 

கொள்ளலாம்.இப்படி இருவேறு விதமாக

பொருள் கொண்டாலும் 

வள்ளுவர் சொல்ல வந்த கருத்து

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று

பேசும் மனிதர்களோடு உறவு

கொள்ளாதிருத்தல் நலம் என்பதே ஆகும்.

"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் "

என்ற வள்ளலாரின் கருத்தும்
இங்கு  நினைவுகூரத் தக்கது.

English couplet :

"Water and shade if they unwholesome prove,

 will bring you pain

And qualities of friends who treacheous act, 

will be your bane. "


Explanation :

Shade and water are not pleasant  ,

if they cause disease,

So are the qualities of one's relations

 not agreeable,( if  )they cause pain .


Transliteration :

"Nizhalneerum Innaadha Innaa thamarneerum
Innaavaam Innaa seyin "

Comments

  1. The meaning of the kural is explained in a beautiful way. Human's physical health and mental health both are important ina man's life. Both the kural and the writer of this article are very good.

    ReplyDelete

Post a Comment

Popular Posts