ஈதல் இசைபட வாழ்தல்....
ஈதல் இசைபட வாழ்தல்....
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு "
குறள் : 231
ஈதல் _ கொடுத்தல்
இசைபட _ புகழ் உண்டாகும்படியாக
வாழ்தல் _ வாழ்க்கை நடத்துதல்
அது _ அப்படி
அல்லது _ அல்லாமல்
ஊதியம் _ வருவாய், பயன்
இல்லை _ இல்லாததாகும்
உயிர்க்கு _ உயிருக்கு
வறியர்க்குக் கொடுத்துப் புகழ் உண்டாகும்படி
வாழ்தல் வேண்டும்.அப்புகழைத் தவிர
உயிர்க்கு ஊதியம் வேறொன்றுமில்லை.
விளக்கம் :
ஒருவருக்கு புகழ் என்பது கல்வியால்
வரலாம்.
வீரத்தால் பெற்றிடலாம்.
செல்வத்தால் புகழை அடையலாம்.
பதவியால் வந்திடலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும்விட
ஈகையால் வரும் புகழ் மட்டுமே சிறந்ததாக
கருதப்படும்.
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பர்.
அந்த பத்தும் பறந்துபோன நிலையில்
நின்று...காதுகள் அடைத்து
பசியால் வாடும் ஒருவனுக்கு உணவளித்துப்
பசியாற்றும் பண்பு வர வேண்டும்.
பிறர்க்கு ஈந்து வாழ்தலால் கிடைக்கும்
மகிழ்வு புகழைக் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆதலால் பசிப்பிணி போக்கும் மருத்துவனாக
வாழ்தலே ஒருவருக்குப் பெருமை தருவதாக
இருக்கும்.
நாம் உயிர் வாழ்ந்ததற்கான பலனைப்
பெற்றவர்களாக அப்போதுதான் கருதப்படும்.
ஆதலால் வறியவர்க்கு ஈந்து
புகழ் பட வாழுங்கள் என்கிறார் வள்ளுவர்.
உயிர்க்கு என்ன ஊதியம்? என்று
நினைக்கத் தோன்றும். அதாவது
பயன் என்பதையே வள்ளுவர்
ஊதியம் என்கிறார்.
வாழ்தலின் பயன் ஈதல் என்பது
வள்ளுவரின் கருத்து.
English couplet :
"See that thy life the praise of generous gifts contains;
Save this for living man exists no real hain "
Explanation :
Give to the poor and live with praise.
There is no created profit to man than that.
Transliteration
"Eedhal isaipada vaazhdhal adhuvalladhu
Oothiyam illai uyirkku "
Comments
Post a Comment