தவமறைந்து அல்லவை செய்தல்....

  தவமறைந்து  அல்லவை செய்தல்...

"தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

                            குறள் : 274

தவம்  - தவக்கோலம்
 மறைந்து  - மறைத்து
அல்லவை -தீய செயல்கள்
செய்தல்  -  செய்து வருதல்
புதல் -  புதர்
மறைந்து - மறைந்திருந்து
புள் -      பறவை
சிமிழ்த்து - பிணைத்துப் பிடித்தல்
அற்று - போன்ற தன்மையது

தவக்கோலத்தில் மறைந்து நின்று
தவறான செயல்களில் ஈடுபடுதல்
வேடன் புதரில் மறைந்து நின்று
பறவைகளை வலைவீசிப் பிடிப்பதற்கு 
ஒப்பானதாகும்.

விளக்கம் : 

தவக்கோலம் என்பது பார்த்தவர்கள்
கையெடுத்துக் கும்பிடும்படியான
புனிதத்தன்மை மிக்கது.
அக்கோலத்தில் இருப்பவர்கள் நல்லொழுக்கம்
 மிக்கவர்களாக இருப்பர் என்பது அனைவரின்
 நம்பிக்கை.
 அந்த நம்பிக்கைக் கெடும்படியான தீய செயல்களில்
 ஈடுபடுதல் கூடாது.
 பிறன் மனைவியைத் தன்வயப்படுத்துதல்,
 காணிக்கை என்ற பெயரில் பொருட்களை
 அபகரித்தல் போன்ற தவத்திற்கு ஒவ்வாத
 செயல்களில் ஈடுபடுதல்  புதருக்குப்
 பின்னால் மறைந்து நின்று பறவைகளை
  வலைவீசி கண்ணியில் விழ வைக்கும் 
 வேடனின் செயலுக்கு ஒப்பானதாகும்.
 அப்படிப்பட்ட கபடதாரிகள் 
 வலையில் சிக்கிவிட வேண்டாம்.
 
 வஞ்சக துறவி வேடத்தினரிடம் ஏமாந்தவர்களை
 வேடன் வலையில் வீழ்ந்த பறவைக்கு
 ஒப்பானவர்கள் என்கிறார் வள்ளுவர்.
 
சிமிழ்தல் என்றால் பறவைபோன்று
ஒலி எழுப்பி மயங்க வைத்தல்.
வெளித்தோற்றம் கண்டோ பசப்பான பேச்சைக்
கேட்டோ மயங்கி வலையில் வீழ்ந்து
விடாதிருங்கள்.
போலிகளைக் கண்டறிந்து ஒதுங்கி
இருங்கள்.

English couplet : 

"  'Tis as a tower, silly birds to snare ,in thicket lurks,
When clad in stern ascetic grab,one secret evil works."

Explanation :

He who hides himself under the mask of an ascetic and
commits sins, like a sportsman who conceals himself
in the thicket to catch birds.

Transliteration : 

"Thavam adainthu Allavai Seydhal pudhalmaraindhu
Vettuvan Pulsimizhth Thatu "

Comments

Popular Posts