நட்டார்போல் நல்லவை சொல்லினும்...

 நட்டார்போல் நல்லவை சொல்லினும்....


"நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும் "

                        குறள்  : 826

நட்டார் - நண்பர்
போல் - போன்று
நல்லவை - நன்மை பயப்பவை
சொல்லினும் - சொல்வாராயினும்
ஒட்டார் - மனதளவில் ஒட்டாதவர்
சொல் -  பேச்சு
ஒல்லை - விரைவில்
உணரப்படும் - வெளிப்பட்டுவிடும்


நம்மிடம் பேசும்போது நண்பரைப்போல நன்றாகப்
பேசினாலும் உள்ளத்தால் ஒட்டாதவரின் 
வஞ்சகப் பேச்சு  விரைவிலேயே 
வெளிப்பட்டுவிடும்.

விளக்கம் :

சிலருடைய பேச்சு கேட்பதற்கு இனிமையாக
 இருக்கும். நம்மேல் கரிசனம் இருப்பதுபோல்
 தோன்றும்.இது எல்லாம் போலியாக இருப்பதால்
 மனதளவில் ஒரு நெருக்கம் இருக்காது.
 இவர்களுடைய  இந்தப் போலியான கரிசனமும்
 அன்பும் நமக்கு ஒரு இடர் வரும்போது
 காணாமல் போய்விடும்.
 நமக்கு ஒரு தேவை ஏற்படும் காலத்தில்
 அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து
 அவர்களுடைய உண்மையான
 முகத்தை நாம் கண்டு கொள்ளலாம்.
 கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்
 என்பார்கள்.
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம்.
எல்லோரையும் எல்லா காலங்களிலும்
ஏமாற்றிவிட முடியாது.
சாயம் விரைவிலேயே வெளுத்துப் போகும்.
உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்
என்கிறார் வள்ளுவர்.

உடைந்த கண்ணாடி ஒட்டாது என்பதுபோல
உள்ளத்தில் உண்மையான அன்பு 
இல்லாதவர் நட்பும் ஒருபோதும்
தொடராது. தாமரை இலை நீர் போல
தொட்டும் தொடாமலும் ஒட்டியும்
ஒட்டாமலும் விலகியே இருக்கும்.

English couplet :

"Though many goodly words they speak in friendly tone,
The words of goes will speedly be known "

Explanation : 

Though ( one's ) foes may etter good things as though
they were friends, once will at once understand
(their evil ,import)

Transliteration:

Maattaarpol nallavai sollinum Ottaarsol
Ollai uNarap patum




Comments

Popular Posts