அவ்வித்து அழுக்காறு உடையானைச்....

   அவ்வித்து அழுக்காறு உடையானைச்.....


"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் "
                        குறள் : 167


அவ்வித்து -சூழ்ச்சியால்
அழுக்காறு - பொறாமை
உடையானை - கொண்டவனை
செய்யவள் - திருமகள்
தவ்வையை - தமக்கை ( திருமகளின் அக்கா மூதேவி )
காட்டி - காண்பித்து
விடும் _ நீங்கி விடும்

பொறாமை குணம் கொண்டவர்மீது
திருமகள் வெறுப்பு கொண்டு தன் தமக்கையாகிய 
மூதேவியிடம் விட்டுவிட்டு தான் 
அவ்விடத்தைவிட்டு நீங்கிவிடுவாள்.

விளக்கம் : 

பிறர்மீது பொறாமை கொள்பவர்களிடம்
திருமகள் எனப்படும் செல்வம் நிற்பதில்லை.

பொறாமை குணத்தைப் பொறுத்துக் கொள்ள
 முடியாதவளாக திருமகள் பொறாமை
 குடி கொண்டிருக்கும் வீட்டிலிருந்து
 வெளியேறி விடுவாள். 
அதாவது பொறாமை கொள்பவரின்
வீட்டில் செல்வம் தங்காது.
செல்வம் நீங்கிவிடுமானால் அவளுடைய
தமக்கை எனக்கூடிய மூதேவி வந்து
குடி புகுந்து கொள்வாள்.
அதாவது வறுமை  வந்துவிடும்.
பொறாமை என்னும் தீய குணம் வறுமைக்கு
வழிவகுத்துவிடும்.

ஆதலால் பொறாமை கொள்ளாதீர் என்கிறார்
வள்ளுவர்.

English couplet :

From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.


Explanation :

Lakshmi envying  ( the prosperity )of the envious man
Will depart and introduce him to his sister.


Transliteration : 

"Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval
thavvaiyaik kaatti vitum "

Comments

Popular Posts