ஓணான் பனைமரம் ஏறுமா?
ஓணான் பனைமரம் ஏறுமா?
ஓணான் பனைமரம் ஏறுமா?
ஏன் ஏறாது.....பனைமரம்
சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால்
பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா?
பனை மரத்தில் ஓணான் ஏறியதைப்
நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில்
ஓணான் ஏறும் என்பதை நான்
அடித்துச் சொல்லுவேன்..
ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும்.
ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில்
ஒரு ஓணான் கணக்கு இருக்குதுங்க...
அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய
கணக்கு ஒன்று இருந்தது.
அது இன்றும் பசுமரத்தாணி போல
என் நினைவில் பதிந்துள்ளது.
பாடல் வேண்டுமா?இதோ உங்களுக்காக....
"முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத்
தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன்
சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே
நாணா தொருநாள் நகர்ந்து "
என்று காரி நாயனார் கணக்கதிகாரம்
என்ற நூலில் சொல்லியிருக்கிறாரே!
இப்போவாவது ஓணான் பனைமரம்
ஏறும் என்பதை நம்புகிறீர்களா?
நம்மிபிட்டோம்ப்பா... நம்பிட்டோம்.
அது என்னவோ ஓணான் பாடல்
என்றீர்களே அதற்கு என்ன ஆதாரம்?
சபூத் சாயியே சபூத்?
சபூத் சாயியே கியா சபூத்?
ஆதாரம் வேண்டுமா?
ஆதாரம் இல்லை என்றால்
நம்பமாட்டீங்களா?
இந்தாருங்கள் ஆதாரம் பிடியுங்கள்.
ஓந்தி என்றால் ஓணான்.
இதுதான் ஆதாரம்.
அப்புடியா?.....ஓந்தி என்றால்
ஓணானா?
அப்படித்தான்....அப்படித்தான்...அப்படித்தான்.
இப்போது கணக்குக்கு வாருங்கள்.
ஒரு முழம் என்றால் இரண்டு சாண்.
ஒரு சாண் என்றால் பன்னிரண்டு விரல் அளவு
அப்படியானால் இரண்டு முழம் என்றால்
இருபத்தினான்கு விரல் அளவு
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பனைமரத்தினுடைய உயரம் 32 முழம்.
ஓணான் ஒரு நாளைக்கு ஒரு சாண் ஏறி
நான்கு விரல்கடை தூரம் இறங்குகிறது.
அதாவது பன்னிரண்டு விரல்கடை தூரம் ஏறி
4 விரல்கடை தூரம் இறங்குகிறது.
அப்படியானால் ஒரு நாளைக்கு 8 விரல்கடை
தூரம் ஏறுகிறது இல்லையா?
மறுபடியும் கணக்கிற்கு வாருங்கள்.
பனை மரத்தின் மொத்த உயரம்
32 முழம் என்பதால் அதனை விரல்கடை
அளவாக மாற்றுவோம்.
1 முழம் = 24 விரல்கள்
அப்படியானால் 32 முழங்கள்
என்பது 32 × 24 = 768
பனை மரத்தின் மொத்த உயரம்
768 விரல்கடை அளவு.
இப்போது பனை மரத்தின் மொத்த உயரத்தை
விரல்கடை அளவாக மாற்றியாயிற்று இல்லையா?
ஓணான் 1 நாள் கடக்கும் தூரம் 8 விரல்கடை
தூரம்.
ஓணான் 8 விரல்கடை தூரத்தை ஒருநாளில்
கடந்தால் 768 விரல்கடை தூரத்தை
எத்தனை நாட்களில் கடக்கும்?
எளிதாக கண்டுபிடித்துவிடலாம் அல்லவா?
768 ஐ 8 ஆல் வகுத்தால் எளிதாக விடை கிடைத்துவிடும்.
இப்போது 768 ஐ வகுத்து விடை சொல்லுங்கள்
பார்ப்போம்.
தொண்ணூற்று ஆறா?
நிறையபேர் கண்டுபிடித்துவிட்டீர்களே!
96 தான் சரியான விடை.
சரியான விடை கண்டுபிடித்த
அனைவரையும் பாராட்டுகிறேன்.
கண்டுபிடிக்காதவர்கள்
768 ÷ 8 = 96
என்று வகுத்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது ஓணானானது 768 விரல்கடை தூரத்தைக்
கடக்க 96 நாட்கள் எடுத்துக் கொண்டது.
இப்போது கணக்கு நன்றாக புரிந்திருக்கும்
என்று நம்புகிறேன்.
இப்போதாவது ஓணான் பனைமரத்தில் ஏறும்
என்பதை நம்புகிறீர்களா?
நம்பிட்டோம்பா....நம்பிட்டோம்.
விட்டால் ஓணான் பனை மரத்தில் ஏறுமா ?
ஏறாதா? என்பதற்கு ஒரு பட்டிமன்றமே
நடத்திவிடுவீர்கள் போலிருக்கிறது.
ஓணான் பனைமரத்தில் ஏறும் என்பதற்கு
காரி நாயனாரையும் துணைக்கு அழைத்து
வந்து ஒரு கணக்கையும் அல்லவா
சொல்லித் தந்து விட்டீர்கள்.
இனி நம்பாமல் இருப்போமா?
காரி நாயனார் பார்த்த ஓணான்
ஒரு பனைமரத்து உச்சிக்கு
செல்ல 96 நாட்கள் ஆகின்றன
என்பதையும் நம்பிவிட்டோம்.
நம்பிட்டீங்க இல்ல...
நம்பினோர் கெடுவதில்லை.
வரட்டா?
கணக்காதிகார செய்யுள் அருமை.இதுவரை படிக்காத புதுமை.செல்வராஜ் ஆசிரியை தமிழ் மொழியில் மட்டுமின்றி கணக்குப்பாடத்தை போதிப்பதிலும் வல்லவர் என்பது அருகிலிருந்து நான் கண்டறிந்த உண்மை
ReplyDeleteசித்ரா நன்றி.
Deleteபாலின் ரசித்து
ருசித்து
பாடத்தோடு
ஒன்றி சொல்லிக்
கொடுப்பார்கள்.
எந்தப் பாடலை எழுதும்போது
பாலின் சொல்லிக்
கொடுத்தது இன்றுவரை
என் காதுகளில்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது.
இந்தப் பாடலை
Deleteஎன்று திருத்தி
வாசித்துக்
கொள்ளுங்கள்.
எந்தப் பாடலை
என்று தவறாக
வந்துவிட்டது.