பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

சிந்தும் சிரிப்பலையோ
முந்தும்  முன்னலையோ
எட்வினின்   நகல்  இவனோ
அகவை ஒன்று ஆகுமுன்னே
அலைபேசி தொழில்நுட்பம் 
அறிந்த அறிஞன் இவன் என்பேனோ?

எட்டெடுத்து  வைக்குமுன்ன
பதினாறடி பாயும்  மருள்மானோ?
ஜெஸ்வின் என்பதுன் பெயரோ
எழில் கொஞ்சும் கலையோவியமாய் - எம்
இல்லம் வந்த துரைதான் நீயோ

புரட்டும் நாவொலி உனதோ-உன்
உருட்டு மொழிதான் தமிழோ
வாழ்த்தொலி கேட்டலால் 
வந்ததிந்த மகிழ்வோ?
வாழ்த்தும் உள்ளங்கள்
வாய்த்ததுன் நற்பேறோ?
உள்ளம் உவக்க 
இல்லம்கூடி வாழ்த்துகிறோம்!
நோய்நொடியில்லா நாட்கள் உனதாக
இன்றுபோல் என்றும் மகிழ்ந்து
வானும் நிலனும்போல 
வாழ்வாங்கு வாழ்க....!
பல்லாண்டு...பல்லாண்டு
பல்லாயிரம் ஆண்டு
வாழும் பரம்பரை என்னும் 
நிலைத்த பெயர் எமக்குத் தந்து!


Comments

Popular Posts