புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும்.....

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் ......


புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்  யாக்கை
அகத்துறுப்பு அன்பி   லவர்க்கு. "

                                        குறள் :  79

புறத்து உறுப்பு - வெளி உறுப்பு
எல்லாம் - அனைத்தும்
எவன்செய்யும் - என்ன செய்யும்
யாக்கை - உடம்பு
அகத்துறுப்பு - உள்ளுறுப்பு
அன்பில் - அன்பு
இலவர்க்கு - இல்லாதவர்க்கு


உடம்பின் அகத்துறுப்பு என்று  கருதப்படும் அன்பு
இல்லாதவருக்கு புறத்துறுப்புறுப்புகள் இருந்தும்
அவற்றால் எந்த பயனும் இல்லை.


விளக்கம் :

மனத்தின்கண் இருக்க வேண்டிய
முக்கியமான உறுப்பு ஒன்று
உண்டென்றால் 
அது அன்பு மட்டுமே.
அன்பு என்ற அகஉறுப்பு உள்ளிருந்து
இயக்கும்போதுதான் மற்ற
புறஉறுப்புகள் எல்லாம் சீராக
இயங்கும்.

அது என்ன அன்பு இல்லை என்றால்
புறத்துறுப்புகள் எல்லாம் சீராக
இயங்காதா என்றால் ....ஏன் இயங்காது?
இயங்கும்.
ஆனால் அவற்றின் இயக்கத்தால் யாருக்கும்
எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை.
அன்பால் இயக்கப்பட்டால்தான் புறத்துறுப்புகளால்
பிறர் பயனடைய முடியும்.
அது எப்படி என்கிறீர்களா?

அன்பு கண்களில் இருந்தால் மட்டுமே
பிறர் மீது பரிவு ஏற்படும்.
கருணையோடு நடந்து கொள்ள
முடியும்.
இரக்கம் கொண்டு பிறகுக்கு உதவி
செய்ய முடியும்.
இல்லறத்தை நல்லமுறையில் நடத்திச்
செல்ல முடியும்.
பேசும்  பேச்சில் இனிமை இருக்கும்.


கை, கால், மூக்கு, செவி, வாய்
ஆகிய ஐம்புலன்களாகிய
புறத்துறுப்பு நல்லமுறையில் இருந்தாலும்
அன்பு அந்த புறஉறுப்புகளின்
செயல்பாடுகளின்மீது தன் ஆளுமையைச்
செலுத்தும்போதுதான் அதனால்  நடைபெறும்
செயல்கள் எல்லாம் அறம் சார்ந்து
இருக்கும்.பிறர் நலன் சார்ந்து
இருக்கும்.
அன்பு இல்லை என்றால் இந்த 
புறத்துறுப்புகளால் யாருக்கும்
எந்தவிதப் பயனும் கிடைக்கப்போவதில்லை.
என்கிறார் வள்ளுவர்.

English couplet :

Though every outward part complete , the body fitty framed;
What good , when soul within , of love devoid , lie halt and maimed?

Explanation :

Of what avail are all the external members of the body to those who are
destitute of love , the internal member.


Transliteration :

"Puraththurup pellaam evanseyyum yaakkai
Akaththuruppu anpi lavarkku "


Comments

  1. மிகஅருமையான பயனுள்ளப் பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts