புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து


முந்நூற்று அறுபத்தைந்து
முத்தான நாட்களின்
முதல்நாள் முதல் விடியல்
வெள்ளைக்  காகிதத்தை நீட்டி
கோலம் செய்திட பணிக்க
விரல்கள் காகிதத்தை நெரிக்க
செயல்கள் சித்திரமாய் விரிய
சத்தான உள்ளுறைக்கு 
முத்தான அச்சாரமிட்டு 
முத்தாய்ப்பாய் முன்னுரை எழுதி
முதற்பக்கம் தொடங்கிட 
வாழ்த்துகின்றேன்!
செயல்களால் நாட்களைச்
செதுக்கிட விழைகின்றேன்!
முதற்தரமான வினைகளால்
முந்நூற்று அறுபத்தைந்து
பக்கங்களும் எழில் பெற
இறைவன் அருள் 
தந்திட வேண்டுகின்றேன்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Comments

Post a Comment

Popular Posts