ஒலித்தக்கால் என்னாம் உவரி....

ஒலித்தக்கால் என்றாள் உவரி....


"ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் "

             குறள்: 763

ஒலித்தக்கால் - ஆரவாரம் செய்வதால்

என்னாம்  -என்ன ஆகிவிடும்?

உவரி -  உப்புநீர் நிறைந்த கடல் (போல )

எலிப்பகை- எலியினது பகை

நாகம் - நல்ல பாம்பு

உயிர்ப்பக் - மூச்சுவிட்டதும்

கெடும் - காணாமல் போய்விடும்


எலிகள் எல்லாம் கூடி நல்லபாம்போடு
பகைமை கொண்டு
கடல்போல  ஆரவாரம் செய்வதால்
என்ன நிகழும்?  பாம்பின்
மூச்சொலி கேட்டதும் 
ஒன்றுமில்லாமல் அடங்கிப் போய் விடும்.

விளக்கம் : 

எலிகள் எல்லாம் கூடி நாகத்தின் 
முன்னால் நின்று
கடல் போல்
முழக்கமிட்டாலும் அதனால் வரும்
 தீமை ஏதும் உண்டோ?
நாகம் ஒரு மூச்சு விட்டால் போதும்.
எலிகளின் ஆரவாரம் அப்படியே 
அடங்கிப் போய்விடும்.

அதுபோல எலிபோல வீரம் இல்லாத
பகை நாட்டு வீரர்கள் 
ஏராளமானோர் கூடிநின்று
ஆர்ப்பரித்தாலும் ஆற்றல்மிக்க வீரன்
ஒருவனைக் கண்ட உடனேயே
அப்படியே அடங்கி பின்வாங்கி
சென்றுவிடுவர்.

அச்சமுள்ள எலிகள்
அச்சமில்லா நாகத்தின் முன்
நிற்க அஞ்சும்.


 பகைவரை எதிர்ப்பதற்கு
 எண்ணிக்கை பெரிதல்ல.
 துணிச்சல் உள்ள வீரர் வேண்டும்.
படைமாட்சி என்பது
எண்ணிக்கையில் மதிப்பிடப்படுவதில்லை.
துணிவும் வீரமும் 
எவ்வளவு பெரிய படையையும்
சிதறடித்து ஓட வைத்துவிடும்
என்கிறார் வள்ளுவர்.


பாம்பும் எலியும் உவமைகளாக 
சொல்லப்பட்டுள்ளன.
பெரும்படையாக இருந்தாலும்  
அஞ்சாத வீரர் முன்னால்
தோற்றுப் போய்விடுவார்
என்பது உவமேயமாக
கொள்ளப்படுகிறது.

உவமானம் மட்டும் சொல்லப்பட்டு
உவமேயம்  சொல்லப்படாதிருப்பதால்
இது எடுத்துக்காட்டு உவமை அணியாகும்.



English couplet: 

"Though like the sea the angry mice send fourth their battle cry
What then?
The dragon breathes upon them and they die"


Explanation : 

What if ( a host of ) hostile rats roar like the sea? 
They will perish at the mere breath of cobra.

Transliteration:


"Oliththakkaal ennaam uvari elippakai
Naagam uyirppak ketum "








Comments

Popular Posts