ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்....


ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்....



"ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு"


           குறள் : 642

ஆக்கமும் - வளர்ச்சியும்
கேடும் - அழிவும்
அதனால் - அதன் காரணமாக
வருதலால் - ஏற்படுவதால்
காத்து- போற்றி
ஓம்பல் - பாதுகாத்தல்
சொல்லின் கண் - சொல்லில்
சோர்வு தளர்ச்சி 

ஒருவனுடைய வளர்ச்சியும் அழிவும் தான்
சொல்கின்ற சொல்லால் வருவதால் 
ஒருவன் தான் சொல்லும் சொல்லில் தவறு
இல்லாதபடி காத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம் :

நமது ஆக்கத்திற்கும் அழிவுக்கும் 
நாம் தான் காரணம்.
ஒரு சொல் வெல்லும் .
ஒரு சொல் கொல்லும்.
அதனால் பேசும் பேச்சில்
கவனமாக இருத்தல் வேண்டும்.
நன்மையும் தீமையும் சொல்லால்
வருதலால் நாவைக் காத்துக்
கொண்டு நன்மைக்கு உகந்த
சொற்களையே பேச வேண்டும்.
அதனால்தான் வள்ளுவர்
"யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"
என்று சொல்லித் தந்தார்.

இந்தக் குறளில் நாட்டின் வளர்ச்சி
அமைச்சர்கள் கையில்தான் உள்ளது.
நல்ல சொற்கள் பேசும் அமைச்சர்களால்
நாட்டிற்கு அச்சுறுத்தல் இருக்காது.
மாறாக பொறுப்பற்ற முறையில்
சொற்களைக் கையாளும் அமைச்சர்கள்
இருந்தால் பகை வலிய வந்து வாசலில்
நிற்கும்.
பகையாளியை உருவாக்குவதும் நட்பு
தொடர்வதும் உங்கள் வாய்ச் சொல்லில் தான்
இருக்கிறது.. அதனால் சொற்களைக்
கவனமாக கையாளுங்கள் என்கிறார்
வள்ளுவர்.

அமைச்சர்களுக்கு மட்டுமல்ல.
அனைத்து தரப்பினருக்கும் சொல்லப்பட்ட
குறளாகவே நான் கருதுகிறேன்.
நீங்கள் பேசும் பேச்சுதான்  உங்கள்
 வளர்ச்சியையும்
 தாழ்ச்சியையும் தீர்மானிக்கும்.
  அதனால் பேச்சில் கவனமாக 
 இருங்கள் என்பதுதான் இந்தக்
 குறள் கூறும் செய்தி.


English couplet :

"Since gain and loss in life on speech depend
from careless slip in speech thyself defend"

Explanation : 

Since both wealth and evil result from their speech
ministers should more carefully guard themselves
against faultness therein.

Transliteration :

"Aakkamung ketum adhanaal varudhalaal
Kaaththompal sollinkat sorvu"




Comments

Popular Posts