அம்மா நீ எனக்கு வேண்டும்
அம்மா நீ எனக்கு வேண்டும்
அம்மா நீ எனக்கு வேண்டும்
அனுதினமும் உன் தோளில் சாய்ந்து
ஆறுதல் நான் அடைந்திட வேண்டும்.
அம்மா உன் அன்பு வேண்டும்
நீ மட்டுமே எனக்குவேண்டும்
உன் மடியில் சாய்ந்து
வானிலவை அழைத்திட வேண்டும்
கண்சிமிட்டும் தாரகையோடு
கதை ஆயிரம் பேசிட வேண்டும்
உன் முகம் பார்த்து
ஊர்க்கதைகள் பேசிட வேண்டும்
உன் மார்பில் சாய்ந்து
உலகமெல்லாம் சுற்றிட வேண்டும்
உன் கையால் என் தலையை
மெல்ல நீ கோதிட வேண்டும்
பெத்தவள் நீ எனக்கு
பேரு சொல்லித் தர வேண்டும்
பொய்யான வார்த்தை பேசி
நெய்ச்சோறு ஊட்ட வேண்டும்
நித்தம் நித்தம் உன் மடியில்
தலை சாய்த்து கிடந்திட வேண்டும்
சத்தமில்லா முத்தம் தந்து
கன்னத்தை கன்னிட
வைத்தல் வேண்டும்
முற்றம் எங்கும் உன்னோடு
குறுநடை நடந்திட வேண்டும்
சோர்வு வந்திடும்போதும்
துயரங்கள் துரத்தும்போதும்
அம்மா உன் தோள் எனக்கு
ஆறுதலாய் இருந்திடல் வேண்டும்
விரல்களால் நம்பிக்கை வார்த்தை
என் முதுகில் நீ எழுதிட வேண்டும்
வீதிவீதியாய் அம்மா உன் கரம் பற்றி
ஆனந்த நடை போட வேண்டும்
அம்மா நீ எனக்கு வேண்டும்
அனுதினமும் உன் தோளில் சாய்ந்து
ஆறுதல் நான் அடைந்திட வேண்டும்!
Comments
Post a Comment