திருமணநாள் வாழ்த்து

திருமணநாள் வாழ்த்து


கதிரவனும் கதிரனுப்பி 
மணநாள் வாழ்த்துரைக்க
வான்மழையும் நீருகுத்து 
வாழ்த்திசையைப் பாடி நிற்க
அன்றலர் அல்லி 
நின் நகைகண்டு
 நாணி முகம் கோணி நிற்க
 சுற்றிவரும் சிற்றெறும்பும் 
 சற்று  தன்செயல் மறக்க
 விழுதெனப் பிள்ளைகள்
 பக்கம் நின்றிருக்க
 அண்ணாந்து பார்த்து 
 எந்நாளும்  எல்லோரும்
  ஏந்தி முகம் பார்த்திருக்க
 வானும் நிலனும் போல
 வாழ்வாங்கு வாழ்ந்தின்பம் காண்க!
 
 வாழ்க பல்லாண்டு ...பல்லாண்டு...
 பல்லாயிரம் ஆண்டு
 இன்றுபோல் என்றும் இணைந்து!

          - செல்வபாய் ஜெயராஜ் 

Comments

Popular Posts