அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை....

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை...


"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும் "

                 குறள் : 185
                 
அறம் - நல்வினை
சொல்லும் - சொல்லுதல்
நெஞ்சத்தான் - உள்ளம் உடையவன்
அன்மை - அல்லாமை
புறம்- காணாத இடம், வெளியிடம்
சொல்லும் - சொல்லுகின்ற
புன்மையால்- இழிச் செயலால்
காணப்படும் - அறியப்படும்


ஒருவனிடம் இருக்கும் புறங்கூறும்
குணத்தை வைத்தே
அவனிடம் அறமில்லை என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.

விளக்கம் :

ஒருவன் கல்வி அறிவில் சிறந்தவனாக
இருக்கலாம். அறநூல்களைக் கற்றுத்
தேர்ந்திருக்கலாம்.பேச்சில் அறம்
இருக்கலாம். ஆனால் அவனிடம்
புறங்கூறுதல் என்ற ஒரு இழிகுணம்
இருந்துவிட்டால் போதும் அவனிடம்
அறம் இல்லை என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.
உள்ளத்தில் அறச்சிந்தனை உள்ள
எவருக்கும் புறங்கூறும் எண்ணம் எழாது.

அறம் பேசுவதால் மட்டும்
ஒருவரை அறம் உடையவர்
என்று எண்ணிவிடாதிருங்கள்.
முகத்திற்கு முன்னால் இனிமையாகவும்
முதுகுக்குப் பின்னால் அவதூறாகவும்
பேசும் அந்த ஒரு பண்பு மட்டுமே போதும்.
இவரிடம் அறம் இல்லை என்பதை உலகுக்குக்
காட்டிக் கொடுத்துவிடும்.

புறம் சொல்லுகிறவர் மனதில் பொறாமை இருக்கும்.
பிறர் மீது வெறுப்பு இருக்கும். பிறரது
நன்மையை ஏற்றுக்கொள்ள முடியாத
மனநிலை கொண்டவராக இருப்பார்.
பிறருடைய வளர்ச்சியை மனம் ஏற்றுக்
கொள்ள மனம் மறுக்கும்.
 இப்படிப்பட்ட கீழ்த்தரமான
எண்ணங்கள் கொண்ட ஒருவரால் மட்டுமே
 புறங்கூறித் திரிய முடியும்.

மனத்தூய்மை இல்லாமைதான்
புறங்கூறுதலுக்கு மூல காரணமாக
இருக்கும். ஆதலால் புறஙகூறும்
ஒற்றைப் பண்பே அவனிடம் அறம்
இல்லை என்பதைக் காட்டிக்கொடுத்து விடும்
என்கிறார் வள்ளுவர்.


English couplet:

"The slanderous meanness that' an absent friend defames.
"This man in words owns virtue not in heart proclaims."

Explanation:

The emptiness of that' man's mind who merely
 praises virtue will be seen from the meanness of 
 reviling another behind his back.

Transliteration:

"Aranjollum Nenjaththaan Annai puranjollum
Punmaiyar kaanap  patum "

Comments

Popular Posts