ஆசிரியர் நாள் வாழ்த்து
ஆசிரியர் நாள் வாழ்த்து
பள்ளி என்னும்
கருவறையில் எம்மை
கருவாக்கி உருவாக்கி
உயிரின் உயிராய்
மெய்யின் மெய்யாய்
எழுத்தின் வடிவாய்
சொல்லின் பொருளாய்
எண்ணின் தொடரியாய்
தொடருரைப் பகர்ந்து
மடமையைக் களைந்து
மதியொளி ஏற்றி
விழுமியங்கள் ஊட்டி
விழுநீர்ப் பாய்ச்சி
வேராய் இருந்து
விழுதாய்த் தாங்கி
சிகரம் தொட ஏணியாய்
பேராழி கடக்க தோணியாய்
பெருமதி புகட்டிய
நல்லாசிரிய பெருமக்களுக்கு
ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்!
Comments
Post a Comment