எட்டுத்தொகை நூல்கள் யாவை

எட்டுத்தொகை நூல்கள் யாவை


சங்க இலக்கியங்களுள் சிறப்பான நூல்களின் தொகுப்பு  எட்டுத்தொகை. 

இது எட்டு நூல்களின் தொகுப்பு ஆதலால் எட்டுத்தொகை எனப்

பெயர் பெற்றது.

இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பல்வேறு புலவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை.

 பின்னர் அவை யாவும் கடைச்சங்க காலத்தில் ஒருசேரத் தொகுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.


எட்டுத்தொகை பாடல்களளைப் பாடிய புலவர்கள் மொத்தம் 700  என்று கூறப்பட்டுள்ளது

இவற்றுள்  30 பெண்பாற் புலவர்களும் 

அடங்குவர்.


எட்டுத்தொகை நூல்களாவன:


1.நற்றிணை


2.குறுந்தொகை


3.ஐங்குறுநூறு


4.பதிற்றுப்பத்து


5.பரிபாடல்


6.கலித்தொகை


7.அகநானூறு


8.புறநானூறு


இந்த எட்டு நூல்களுள்,

அகப்பொருள் பற்றிய நூல்கள்:


1.நற்றிணை

2.குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4.கலித்தொகை

5.அகநானூறு


புறப்பொருள் பற்றிய நூல்கள்:

6.புறநானூறு

7.பதிற்றுப்பத்து

அகமும் புறமும் கலந்து பாடப்பட்ட நூல்:

8. பரிபாடல்.


எட்டுத்தொகை நூல்களைப் பற்றி 

எளிதாக மனதில் பதிய வைத்துக்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாடு உங்களுக்காக:

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை"


பாடலை மனனம் செய்து கொள்ளுங்கள்.

Comments