பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள்


சங்க இலக்கிய நூல்களுள்

முதலாவது வரிசையில் வைத்து

எண்ணப்படுவது பத்துப்பாட்டு.


பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

அவற்றை எழுதியவர்கள் யார் யார்?

அந்தப் பாட்டுடைத் தலைவர்கள் யார் யார் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் 

காண்போம்.




1. திருமுருகாற்றுப் படை


2.பொருநராற்றுப் படை


3.சிறுபாணாற்றுப் படை


4.பெரும்பாணாற்றுப் படை


5.முல்லைப்பாட்டு


6.மதுரைக் காஞ்சி


7.நெடுநல்வாடை


8.குறிஞ்சிப் பாட்டு


9..பட்டினப்பாலை


10.மலைபடுகடாம் 


ஆகிய பத்தும் பத்துப்பாட்டு

நூல்களாகும்.



இவற்றுள்,


1.புறப்பொருள் பற்றிய நூல்கள்:


திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

மலைபடுகடாம்

மதுரைக்காஞ்சி

ஆகிய ஆறு நூல்களுமாகும்.


2.அகப்பொருள் பற்றிய நூல்கள்:


குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

முல்லைப்பாட்டு

ஆகிய மூன்று நூல்களுமாகும்.


3. அகப்பொருள், புறப்பொருள் 


இரண்டும் விரவிய  நூல்:


நெடுநல்வாடை

என்ற ஒரு நூல் மட்டும்.


பத்துப்பாட்டு பாடல்கள் எழுதியவர்கள்

மற்றும் பாட்டுடைத் தலைவர்கள்.



திருமுருகாற்றுப்படை-    நக்கீரர்


பாட்டுடைத் தலைவன்

முருகன்



பொருநராற்றுப்படை-


முடத்தாமக் கண்ணியார்


பாட்டுடைத் தலைவன்:

சோழன் கரிகாலன்



சிறுபாணாற்றுப்படை -

நல்லூர் நத்தத்தனார்


பாட்டுடைத் தலைவன்:

நல்லியக்கோடன்



பெரும்பாணாற்றுப்படை -


கடியலூர் உருத்திரங் கண்ணனார்


பாட்டுடைத் தலைவன்:

தொண்டைமான் இளந்திரையன்


மலைபடுகடாம் -


பெருங்கௌசிகனார்


பாட்டுடைத் தலைவன்:

நன்னன் சேய் நன்னன்



குறிஞ்சிப்பாட்டு -


கபிலர்


பாட்டுடைத் தலைவன்:

ஆரிய அரசன் பிரகதத்தன்




முல்லைப்பாட்டு-


நப்பூதனார்


பாட்டுடைத் தலைவன்:

பாண்டியன் நெடுஞ்செழியன்



பட்டினப்பாலை-


கடியலூர் உருத்திரங் கண்ணனார்


பாட்டுடைத் தலைவன்:

சோழன் கரிகாலன்



நெடுநல்வாடை-


நக்கீரர்


பாட்டுடைத் தலைவன்:

பாண்டியன் நெடுஞ்செழியன்



மதுரைக்காஞ்சி-


மாங்குடி மருதனார்


பாட்டுடைத் தலைவன்:

பாண்டியன் நெடுஞ்செழியன்


 

இதனை மனப்பாடமாகப் படித்து

எளிதில் மனதில் பதிய வைத்துக்கொள்வதற்கு

வாய்ப்பாடாக ஒரு செய்யுள் உள்ளது.

அதனை அப்படியே படித்து மனனம் செய்து வைத்துக் கொண்டால் காலத்துக்கும் மறந்து போகாது.


பாடல் உங்களுக்காக...


முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய

கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.



Comments