நோவாவின் பேழை விடுகதை

நோவாவின் பேழை விடுகதை


1.  விண்ணை முட்டிய மலை

       பேழை தட்டிய மலை

       அது எந்த மலை?


                  விடை : ஆரராத் மலை


2. வானில் வண்ணம் காட்டுவேன்

    மழை நாள் கண்டு மகிழ்ந்து நிற்பேன்

     உடன்படிக்கையின் அடையாளம் 

     நான்     என்றதும்

     விண்ணில் பறப்பது போல் மகிழ்கிறேன்.

     நான் யார் தெரியுமா?


   விடை :  வானவில்


3.  சமாதானம் பேச வந்தேன்

      என்னை அழைத்து

      காலநிலை அறிந்து வர அனுப்பிவிட்டார்.

      நான் யார்?


    விடை :. புறா


4. கூடி உண்பேன்

     பந்தியில் அல்ல;

     தன்னந்தனியாய் வெளியேறினேன்

     தண்ணீரில் அல்ல

     நான் யார்?


      விடை : காகம்

                

5.  தேவனுக்கு பிரியமானது 

      என் பெயர் உள்ள மலை.

      நான் கொத்தி வந்தது இந்த இலை.

       அது எந்த இலை?


     விடை :ஒலிவ இலை



6. மழை பெய்த நாட்களை

     நான்கால் பெருக்கி

     பத்தை கழித்தால்

     பூமியில் தண்ணீர்

      நீடித்த நாட்களாகுமாம்.

      அப்படியானால் எத்தனை 

       எத்தனை நாட்கள் தண்ணீர் 

நீடித்திருக்கும்?

     சொல்லுங்கள் பார்ப்போம்?


     விடை.  :150


7..  'நோ' என்ற மறுப்பும் இல்லை

      'வா ' என்ற அழைப்பும் இல்லை

      நோவா என்றால் மட்டும்

      இப்படித்தான்  அழைக்கப்படுமாம்.

     அந்த இப்படி...

     எப்படி என்பது தெரியுமா?


     விடை : இளைப்பாறுதல்


8. ஐந்து மாடி கொண்ட வீடு 

    எட்டு பேர் வசிக்கும் வீடு

    காட்டுவாசி  எனக்கும் இங்கே

    வீட்டுக் காவல் பணி உண்டு.

    நான் யார் தெரியுமா?


 விடை:.  கொப்பேர் மரம்

 


 9. தாத்தா என்னை சபித்து விட்டார்

      அடிமைக்கு அடிமை

      போடா என்று சொல்லிவிட்டார்

      மனம் நொந்து கிடக்கிறேன்.

      நான் யார் தெரியுமா?


விடை : கானான்


10. அடாது பெய்தேன்

       விடாது அழுதேன்

       இந்த நாளில்

       என் மூச்சும் நின்று போனது.

       அது எத்தனையாவது நாள் தெரியுமா?


 விடை : நாற்பதாவது நாள்


11.   சிலந்திக்கும் எங்களுக்கும் 

       ஒற்றுமை  ஒன்றுண்டு

       எண்ணிப் பார்த்தால் 

      விடையும் உண்டு

              அது என்ன?


  விடை :       எட்டு


12 . நோவாவின் ஜலபிரவாகத்திற்கும்

     உபவாசத்திற்கும்  ஓர் 

     ஒற்றுமை உண்டாம்.

     ஆண்டுகளில் அல்ல...

     நாட்களில்.....

     கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.



   விடை :.  நாற்பது

     

             


   

      

      


    




Comments