முதலைக் கண்ணீர்

முதலைக் கண்ணீர் 


 எது போலி எது அசல் என்று

தெரியாதபடி போலிகளின் நடிப்பால்

திணறிப் போய் நிற்கிறோம்.


சிலருக்குப்  பொசுக் பொசுக்கென்று கண்ணீர் வரும்.

சிறிது கவலையாகப் பேசிவிட்டால் போதும்.

கண்களை கண்களைத் துடைப்பார்.

நமக்கு அவர்மீது ஒரு நல்லெண்ணம் ஏற்பட்டு விடும்.

நமக்காக வருந்த ஓர் உயிர் இருக்கிறதா?

எளிதில் அவர் வலையில் விழுந்து விடுவோம்.

அவருடைய கண்ணீர் 

போலியாக செயற்கைத் தனமாக

வேண்டுமென்றே வடிப்பதாக இருக்கலாம்.


இதைத்தான் முதலைக் கண்ணீர் என்று

சொல்கிறோம்.


ஏன் முதலைக் கண்ணீர் என்று சொல்கிறோம்.?

யானைக் கண்ணீர்

என்று சொல்லலாம்.

பூனைக்கண்ணீர் என்று சொல்லலாம்.

ஏன் மாட்டுக் கண்ணீர் என்று கூட சொல்லலாம். ஏன் முதலைக் கண்ணீர் என்றனர் என்ற கேள்வி எழலாம்.

முதலைக்கும் கண்ணீருக்கும் என்ன சம்பந்தம் ?


முதலை எந்தக் காலத்தில் கண்ணீர்

வடித்தது?


எதற்காக வடித்தது?


அப்படியே வடித்திருந்தாலும்

நம்மால் காண முடியுமா?


தண்ணீருக்குள்ளேயே கிடக்கும்

முதலையின் கண்களில் இருந்து

வடியும் நீர் கண்ணீர் என்று

எப்படி அறிவது?


ஒருவேளை அது நீராகவும் இருக்கலாமல்லவா?


இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள்

வந்து விடை கேட்டு வழி மறித்து

நிற்கும்.


அத்தனைக்கும் விடையளிக்க

இயலாது.

ஆனால் தங்கள் கேள்விகளில் இருக்கும்

நியாயமான காரணங்கள் புரியாமல் இல்லை.


முதலை நீருக்குள் கிடக்கும் அதற்கு கண்ணீர் வருமா  ?

என்ற கேள்வியை மட்டும் கையில் எடுத்து

அடுத்த கட்டத்திற்குக் கடந்து செல்வோம்.


முதலைகள் உணவு உண்ணும் போது

அழும் அதாவது கண்ணீர் விடும் என்று

ஒரு கதை இருந்து வந்தது.

அது அடிப்படை ஆதாரமற்றது.

எனினும் சில நேரங்களில் அப்படி ஒரு

காட்சியைக் காண முடிந்தது.

இது எதனால் நிகழ்கிறது என்று ஆய்வுகள்

நிகழ்த்தப்பட்டன.


ஆய்வாளர் ஜார்ஜ் ஜான்சன் என்பவர்

முதலையின் கண்களின் ஓரத்தில் வெங்காயம் மற்றும் உப்பு இவற்றைத்

தேய்த்துப் பார்த்து ஆராய்ச்சிகளை

நிகழ்த்திப் பார்த்தார். அப்போது

முதலைகளின் கண்களிலிருந்து கண்ணீர்

வரவில்லை.

இதன்மூலம் முதலைகள் உணர்ச்சியினால் கண்ணீர் சிந்தும்

என்ற கருத்து உண்மை அல்ல என்பதை

உறுதி செய்தார்.


ஆனால் 2006 இல் நிகழ்த்தப்பட்ட 

ஆய்வில் முதலைகள் உணவு உண்ணும் போது கண்ணீர் விடுவது உறுதியானது.

உணவு உண்ணும் போது தாடைகளின் அதிகப்படியான அசைவு கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டி கண்ணீரை வரவழைத்திருக்கலாம் 

என்று கூறப்பட்டது.

அப்படியானால் முதலைகள் உண்ணும்

உணவுக்கும் கண்ணீருக்கும் ஏதோ தொடர்பு

இருக்க வேண்டும் என்ற கோணத்திலும்

ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.


இறுதியாக முதலைகள் கண்ணீர் என்பது போலியானது.

முதலைகள் தங்கள் இரையை ஈர்க்க போலியாக கண்ணீர் சிந்தும் .  

முதலைகள் கண்ணீர் சிந்துவது என்பது

தங்கள் கண்கள் வறண்டு போகாமல் இருப்பதற்குத்தானே தவிர உணர்வுப்பூர்வமாக எதையாவது பார்த்த மாத்திரத்தில்  ஏற்படுவதல்ல என்பது  நிரூபணமானது.


எது எப்படியோ முதலைக் கண்ணீர் என்பது

போலியானது. பிறர் துன்பத்தைப் பார்த்து

வருவதல்ல.

தனக்கான ஆதாயம் கருதி தனது இரையைப்

பிடிப்பதற்காக போலியாக சிந்தப்படும்

கண்ணீர் முதலைக் கண்ணீர் என்பதுதான் அனைவராலும் சொல்லப்பட்ட கருத்து.

ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.


அதனால்தான் ஒருவர் போலியாக நமக்காக

கண்ணீர் சிந்துவது போல

நடிப்பதை முதலைக் கண்ணீருக்கு ஒப்பானது என்று சொல்கிறோம்.

இப்போது முதலைகள் கண்ணீர் 

போலியானது என்பது புரிந்திருக்கும்.


போலியாக  முதலையைப் போன்று கண்ணீர்  வடிப்பவர்களை

நம்பாமல் ஒதுங்கி இருப்போம்.



Comments