கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை
பேய் உண்டா?
இல்லையா?
இருக்கிறது என்று ஒரு சாராரும்
இல்லை என்று இன்னொரு சாராரும்
தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
உண்மையில் இருக்கிறது என்பது
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
அப்படியானால் பேய் இல்லை என்பதைத்தானே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் மனம் அதையும் ஏற்றுக்கொள்ள
மறுக்கிறது.
குழந்தை பருவத்திலிருந்து பேய்
இருக்கிறது என்று சொசொல்லிச்ம்ல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
பேய் கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேன்.
சாப்பிடு
என்று பயமுறுத்தப்பட்டிருக்கிறோம்.
பேயை சொம்புக்குள் அடைக்கும் மாயாஜால
கதைகளைப் பார்த்து பார்த்து வளர்ந்திருக்கிறோம்.
இளமையில் பாடம் பசுமரத்தாணி.
இளமையில் மனதில் பதிவுசெய்து வைக்கப்பட்ட எதையும் மிக எளிதாக
துடைத்துப் போட்டுவிட முடியாது.
அதனால்தான் பேய் இல்லை என்பதை
மனம் ஏற்க மறுக்கிறது.
இருட்டைக் கண்டால் பயம்.
திடீரென்று வெளிச்சத்தைக் கண்டால் பயம்.
நிசப்தமான இடங்களில் செல்ல பயம்.
ஓவென்று அலறல் கேட்டால் உள்ளுக்குள்
பயம்.
இப்படி நாம் பயப்படும் யாவற்றையும்
பேயோடு தொடர்புபடுத்திக் பார்க்கிறோம்.
ஒரு ஊரில் பாழும் கிணற்றில் விழுந்து
ஒரு சிறுவன் இறந்துவிட்டான்.
ஊர்கூடி ஒப்பாரி வைத்தது.
பாழுங்கிணற்றில் பேய் இருக்கிறது
என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். என் பேச்சைக் கேட்காமல்
போய் விழுந்து விட்டாயே என்று
சொல்லிச் சொல்லி பையனின் அம்மா அழுதார்.
இப்போது பாழும் கிணறு என்றால் அங்கு
பேய் இருக்கும் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு விட்டது.
பூதம் என்பது என்ன ?
ஏன் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக என்ற சொல்லாடல் வந்தது என்ற கேள்விக்கு வருவோம்.
நாம் நல்லது நடக்கும் என்று ஒரு
செயலில் இறங்க அது மாறாக
எதிர்வினைகளை ஏற்படுத்திவிட்டால்
நானொன்று நினைக்க வேறொன்று நடக்கிறதே
என்று சொல்வதற்குத்தான்
இந்தப் பழமொழியைப் பயன்படுத்தியிருப்பார்கள்.
பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட
கார்பன் மோனாக்சைடு போன்ற விஷ வாயுக்கள் இருக்கும்.
அவற்றை சுவாசித்தால் உயிருக்கு
ஆபத்து ஏற்படலாம்.
அப்படி நிகழும் உயிரிழப்பினைத்தான்
பூதத்தோடு தொடர்பு படுத்திப் பேசியில் கின்றனர் என்பவர்கள் உண்டு
இதனை வேறு கோணத்தில்
சிந்தித்த கலைஞர் அவர்கள்
என்ன சொல்கிறார் கேளுங்கள்.
நிலம் நீர் நெருப்பு காற்று
ஆகாயம் இவை ஐந்தினையும் பஞ்சபூதங்கள் என்கிறோம்.
கிணறு வெட்டுவதற்காக முதலாவது
மண்ணைத் தோண்ட வேண்டும்.
நிலத்திலுள்ள மண் வெளியில் வருவதால் முதலாவது பூதம் புறப்பட்டு வந்து விட்டது.
இப்போது தோண்ட தோண்ட
உள்ளிருக்கும் காற்று வெளியில் வரும்.
அது இரண்டாவது பூதம்.
அடுத்து தோண்ட தோண்ட பொங்கிவரும் புதுப்புனல் பீறிட்டு கிளம்பும்.
அது மூன்றாம் பூதம்.
அந்த கிணற்றுநீரில் வானம் தெரியும்.
அது நான்காம் பூதம்.
கதிரவனின் தீக்கரத்தால் அந்நீரும்
பொலிவு பெறும்.
இது ஐந்தாவது பூதம்.
இவ்வாறு கிணறு வெட்டும்போது ஒவ்வொரு பூதமாக
வெளி வருவதைத்தான் கிணறு வெட்ட
பூதம் கிளம்பியதாகச் சொல்கிறார்கள்.
இப்போது தெரிகிறதா கிணறு வெட்ட
பூதம் கிளம்பிய கதை என்ன என்பது என்று கேட்கிறார் கலைஞர் அவர்கள்.
இதுதான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை.
இது ஒரு புதிய சிந்தனை இல்லையா?
Comments
Post a Comment