நினைவுகூர்தல்
நினைவுகூர்தல்
நினைவுகூறுதல் எது சரி
சில சொற்களை பேசும்போது எந்தவித ஐயப்பாடுமின்றி
எளிதாக பேசி விட்டுச் சென்று விடுவோம்.
ஆனால் எழுதிவிட்டு திரும்பவும் வாசித்துப் பார்க்கும்போது நாம் சரியாகத்தான் எழுதியிருக்கிறோமா என்ற ஓர் ஐயப்பாடு ஏற்படும்.
மறுபடியும் மறுபடியும் வாசித்துப் பார்ப்போம்.
பொருள் மாறுபடுவதுபோல தோன்றும்.
ஆனாலும் எந்தச் சொல்லை எழுதுவது என்ற தெளிவு உடனடியாகக் கிடைத்துவிடாது.
கடைசிவரை மனதிற்குற்குள் விவாதத்திற்கு விட்டுப் பார்த்து ஏதோ ஒரு முடிவுக்கு வந்து
ஒரு சொல்லை எழுதுவோம்.
அது தவறான பொருளாகி விடுவதுண்டு.
இப்படி நம்மை பலமுறை குழப்பமான மனநிலையில் கொண்டுவந்து நிறுத்தும் ஒரு சொல் நினைவு கூறுதல்.
நினைவு கூறுதல் என்றால் நினைவு கூறுதல் தான் . கூறுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள்.
நம் பழைய நினைவுகளை நினைவுபடுத்தி அடுத்தவர்களிடம் கூறுவது நினைவு கூறுதல்.
அப்படியானால் நினைவு கூர்ந்தார் என்ற சொல்லையும் நாம் பயன்படுத்தி வருகிறோமே...இந்த நினைவு கூர்தலும் அந்த நினைவு கூறுதலும் ஒன்றா என்ற
கேள்வி எழலாம்.
கூறுதலும் கூர்தலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?
கூறுதல் -சொல்லுதல்
கூர்தல்-
இப்படி இரண்டிலும் பொருள் வேறுபாடு இருக்கிறது. அப்படி இருக்கும்போது
இரண்டு சொற்களும் எப்படி ஒரே மாதிரியான பொருளுக்குப் பயன்படுத்த முடியும்?
கூடாதல்லவா?
ஆதலால் நினைகூர்தல் என்றால் நினைவு படுத்திக் பார்த்தல் என்ற பொருளில் சொல்லும்போது பயன்படுத்த வேண்டும்.
பழைய நினைவினைப் பற்றி மறுபடியும் பேசும்போது நினைவு கூறுதல் என்று சொல்ல வேண்டும்.
மறுபடியும் ஒருமுறை நினைவில்
கொள்க.
நினைவு கூறுதல் என்றால்
பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்திச் திரும்ப யாரிடமாவது சொல்லுதல்.
நினைவுகூர்தல் என்றால்
நினைவுபடுத்திப் பார்த்தல்
என்பதாகும்.
இங்கு நாம் நினைவுகூரத் தக்கது
இந்தக் கட்டுரையை
மறுபடியும் ஒருமுறை நினைவுகூர்தல் நல்லது.
Comments
Post a Comment