பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்
தைமகள் கடைக்கண் திறப்பால்
 நிலமகள் தந்த  செழிப்பால்

உழவன் செய்த உழைப்பால்
கழனி எல்லாம் பயிர்வனப்பால்

நிறைகதிர் கண்ட களிப்பால்
பிறைமதியார் உள்ளம் பூரிப்பால்

சுனையாகும் இன்பத் திருப்பால்
மனையில் ஓடும் மகிழ்ச்சிப்பால்

சொல்லரும் பொருட் குவிப்பால்

நல்லறம் நடக்கும் பேரன்பால்

பழையன மறவா பண்பால் 
பண்பாட்டைத் துறக்காச் சிறப்பால்

தமிழ்ப்பால் கொண்ட விருப்பால்
அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால்

பொருட்பால் கிடைத்த மலைப்பால்
இன்பத்துப்பால் நுகர்வீர் உள்ளன்பால்

ஆதவன் சிரிப்பால் ஆவின்பால்
பொங்கல் காணும்  உவப்பால்

இணைப்பால் கரம் குவிப்பால்
இனிப்பால்  பொங்கட்டும் மகிழ்ச்சிப்பால்!


அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்!

Comments