ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்
ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்
அகரம் அறிமுகம் செய்து
சிகரம் தொடும்வரை
நகரா ஏணியாயிருந்து
பகரும்மொழியை மடமை
தகரும் வரை ஊட்டி
பழுதிலா வாழ்க்கைக்குப்
வழுவிலா நெறியமைத்து
பத்திரமாய்க் கரம் பிடித்து
சிலையாய் செதுக்கி
சிற்பமாய் அணியம் செய்து
செந்தமிழைச் செப்பமுறச்
செப்பும்வரை உதடசைத்து
ஓயா பயிற்சி தந்து
தரிசு நிலமாம் என்னைப்
பண்படுத்திப் பயனுறச் செய்ய
விழுமியங்களை விதைகளாக்கி
விழுநீராய் அறிவுநீர்ப் பாய்ச்சி
வீழ்விலாக் கல்வியூட்டி வளர்த்த
ஆசானின் பாதம் தொட்டு
வாழ்த்தி வணங்குகிறேன்!
ஆசிரிய பெருமக்களுக்கு
ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்!
Comments
Post a Comment