பறவை

பறவை
நேர்கோட்டில்‌ பயணம்
படித்துத் தந்தது
பறவை


காடெங்கும் விதைத்துப் போட்டதை அறுவடை
செய்யும் பங்காளி

எல்லை பிரச்சினை
தொல்லையில்லா உலகம் சுற்றும்
வாலிபன்

மூடி மறைக்க முகக்கவசம்
தேவையில்லா முதன்மை 
மனிதன்

ஊரடங்கிலும் உலகைச் சுற்றிவர
கோல்டன் விசா வைத்திருக்கும்
பெரும்புள்ளிதிசைகாட்டி இல்லாமல்
திசைமாறாது போய்ச்சேரும்
வானூர்திஉந்து சக்தி ஏற்றாமல்
உயர பறக்கும்  
வானூர்தி 
             இரை

உயிர் கொடுத்தவன்
கட்டி வைத்தான் வனமெங்கும்
இலவச உணவகம்!


       பயணம்

நேர் கோட்டில் பயணம்
நேர்த்தியான பாதையில்
பறந்தன பறவைகள்!


     வயிறு

உணவகங்கள் அடைப்பு
அடங்க மறுத்து ஒப்பாரி
போட்டது  வயிறு!


          பாதை

சுடுகாட்டுக்குப் பாதை கேட்டுப்
போராட்டம்
பாதை பார்க்காமல் பறந்தது
 உயிர்

 


 
 
 

Comments

Post a Comment

Popular Posts