பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சிந்தும் சிரிப்பலையே
முந்தும் மொழியலையே
நடமாடும் பல்கலையே
எழிலாடும் புன்னகையே
நற்றிணையே !நல்லறிவே!
முத்தமிழே !முழுநிலவே!
கவித்தேனே!கற்கண்டே!
பேசும் சொற்களஞ்சியமே !
என்னவென் றழைப்பேன்?
ஏதுசொல்லி அறிமுகம் செய்வேன்?
மும்பை மாநகராட்சியின்
அறிவுப் பெட்டகமே!
நின்பால் கற்றதும் பெற்றதும்
ஏராளம் ஏராளமே!
பேரறிவாட்டிக்கு வாழ்த்துரைக்கும்
பெரும்பேறு வாய்த்தது
என்றன் நற்பேறென்பேன்
நீலமணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயென்ற
வாழ்த்துனக்கு அனுப்பி வைத்தேன்
வாழ்க பல்லாண்டு ....பல்லாண்டு...
பல்லாயிரம் ஆண்டு..
ராஜேஸ்வரியும் சிரிப்புமாய் இணைந்து!
Comments
Post a Comment