பொங்கல் வாழ்த்து


 தை மகள் வந்தாள்

எழுந்தது கதிரவன்
புலர்ந்தது பொழுது
மலர்ந்தன கண்கள்
தொழுதன கைகள்
புதுப்பானை வந்தது
புதுப்பால் பெய்து
புத்தரிசி இட்டு
பொங்கலிட
புத்தாடை அணிந்த
பூவையும் வந்துவிட்டாள்
குலவையிட்டு வரவேற்க 
குடும்பமாய் யாம் வந்தோம்
தை மகளே வா !
மையிருட்டு விலக்கி
பைய நின்கண் திறந்து
வையம் உவப்ப 
வழி செய்திட
தை மகளே வா!
தரணி செழித்திட
வளங்களை அள்ளித் தா!

Comments