திருக்குறள் புகழுரைகள்

திருக்குறள் புகழுரைகள்



"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

                             -    பாரதியார்
                          


"வள்ளுவர் செய் திருக்குறளை 
மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக் கொரு நீதி "

                  -    மனோன்மணியம் சுந்தரனார்
                  

"வாழ்வுக்கு உரிய அன்புநெறியைக் கூறும்
உயர்ந்த நூல்.உயர்ந்த ஞானத்தைப் புகட்டும்
செம்மொழிகளின் தொகுப்பு.
இதுபோல் உலக இலக்கியத்தில்
வேறு எங்கும் கண்டதில்லை "

           -  ஆல்பர்ட் சுவைட்சர்


"உலகில் உள்ள பொருள்கள் எல்லாம்
மாறுகின்றன.ஒருநாள் மறைந்து
போய்விடுகின்றன.ஆனால்
திருவள்ளுவருடைய புகழ்மட்டும்
மங்கவே இல்லை. பெருகிக்கொண்டே
போகிறது."

                      -      ஜி. யூ. போப்
                      

"செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை
நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம் "

       -   கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
       -   

"அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மானிய
மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட
திருக்குறளில் இருந்துதான் நான்
பெற்றுக் கொண்டேன்."

                       -  டால்ஸ்டாய்
                      

தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய
இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும்
உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம்
அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே
புகழ் வையகமே !

                            - பாரதிதாசன்


கம்பனைப் போல்
வள்ளுவனைப் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை
உண்மை வெறும்
புகழ்ச்சியில்லை "

                -  பாரதியார்
                -  

"அணுவைப் துளைத்து
ஏழ்கடலைப் புகட்டிக் 
குறுகத் தறித்த குறள்"

               -   ஔவையார்
               -   

"கடுகைத் துளைத்தேழ் கடலைப்
புகட்டிக் குறுகத் தறித்த குறள் "

                               -   இடைகாடனார்


வெல்லாத தில்லை
திருவள்ளு வன்வாய் 
விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை
முப்பாலுக்கிந் நிலத்தே!

                  -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


"உள்ளுதோ றுள்ளுதோ உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு"

                         -மாங்குடி மருதனார்

"தினையளவு போதாச்  சிறுபுல்
நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்
மனையழகு வெள்ளைக்கு 
உறங்கும் -வளநாட
வள்ளுவனார் 
வெள்ளைக் குறட்பா விரி"


                                        -  கபிலர்

"உலகினில் நாகரிகம் முற்றிலும்
அழிந்துவிட்டாலும்
திருக்குறளும்
கம்பன் காவியமும்
 இருந்தால் போதும்
அதனை மீண்டும்
புதுப்பித்துவிடலாம்"
 
         -.      கால்டுவெல்

"குன்றாத செந்தளிர் கற்பகத்தின்
தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன்
வள்ளுவர் வாய்ச்சொல்"

          -  இறையனார்

               





 
த हे

Comments

Popular Posts