ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்....


     ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்....!


ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

               குறள் :    967


ஒட்டார்-   பகைவர்,வெறுப்பவர், அவமதிப்பவர்
பின் -பின்னே
சென்று-போய்
ஒருவன் -ஒருவன்
வாழ்க்கை -வாழ்வதைவிட
அந்நிலையே -இருக்கும் நிலையிலேயே
கெட்டான் - கெட்டுப் போனான்
எனப்படுதல் - என்று சொல்லப்படுதல்
நன்று -நன்மை தருவதாகும்


தன்னோடு ஒட்டாது விலகிச் செல்லும்
மனிதர்கள் பின்னால் சென்று வாழ்வதைவிட
மானத்தோடு தற்போதுஇருக்கும் நிலையிலேயே
கெட்டொழிந்தான் என்று சொல்லப்படுமானால்
அதுவே அவனுக்கு நன்மை தருவதாகும்.


விளக்கம் : 


எவ்வளவுதான் நாம் நெருக்கமான உறவு
வைத்துக்கொள்ள வேண்டும் என்று 
நினைத்தாலும் சிலர் தாமரை இலை
நீர் போல ஒட்டாமல் விலகியே இருப்பர்.

அப்படி ஒட்டாதவர்களிடம்  நாமாக வலியபோய்
ஒட்ட நினைப்பது நமது தன்மானத்திற்கு
இழுக்காகும். நம்மில் இருந்து விலகி
இருக்க நினைப்பவரை அப்படியே விட்டுவிட்டு
ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து
ஒருபோதும் கீழே இறங்கி வர
வேண்டாம். அதுதான் உங்கள்
தன்மானத்திற்கு நன்று.

நம்மை மதித்து நம்மை சேர்த்துக்
கொள்ளாதவரோடு நாம் ஏன் ஒட்டிக்கொள்ள
நினைக்க வேண்டும்?
மானம் கெட வாழும் வாழ்க்கை ஒரு
வாழ்க்கையா?
வேண்டாம். நீங்கள் தற்போது
இருக்கும் நிலையே உங்களுக்குப்
போதுமானது.

இப்போது ஒட்டார் யார் ....யார்?
என்ற கேள்வி எழும்.
பகைவர்,இணக்கம் இல்லாதவர்,
மதிக்காதவர்,நம்மோடு ஒத்துக் போகாதவர்
யாவரும் ஒட்டார் என்ற பொருளின் கீழ் வருவர்.

நம்மை விட்டு விலக நினைப்பவரோடு
உறவு வைத்து உயர்வடைவதைவிட
உயர்வில்லா நிலையிலேயே இருத்தல்
நலம் என்கிறார் வள்ளுவர்.


English couplet : 

"Better t'were said ,He's perished than to gain
The mean to live, following in foeman's train."

Explanation : 

It is better for a man to be said of him  that
he died in his usual state than that he eked
out his life by following those who 
disgraced him.

Transliteration :

"Ottaarpin sendrouvan vaazhdhalin annilaiye krettaan
enappatudhal nandru "





Comments

Popular Posts