உழவினார் கைம்மடங்கின் இல்லை...

உழவினார் கைம்மடங்கின் இல்லை....


உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை"

                   குறள் :      1036


உழவினார் - உழவுத் தொழில் செய்பவர்
கை - கையானது
மடங்கின் - வேலை செய்யாதிருந்தால்
இல்லை - இல்லாமல் போய்விடும்
விழைவதூஉம் -விரும்புவதை எல்லாம்
விட்டேம் - விட்டு விட்டேன்
என்பார்க்கும் - என்று சொல்கின்ற துறந்தோர்க்கும்
நிலை - நிலைத்து நிற்றல்உழவுத் தொழில் செய்பவர் கை மடக்கி
வேலை செய்யாது இருந்துவிட்டால்
அனைவரும் விரும்பி உண்ணும் 
உணவைத் துறந்துவிட்டோம் என்று
சொல்லும் துறவிகளும்கூட தங்கள்
அறச்செயல்களில் தொடர்ந்து 
நிலைபெற்றிருக்க முடியாது.

விளக்கம் : 

உழவர் நான் உழவுத் தொழில்
செய்ய மாட்டேன் என்று 
கைகளை மடக்கி சும்மா இருந்துவிட்டால்...
யார் வயலில் இறங்கி வேலை செய்வது?

பயிர்த் தொழில் முற்றிலும் 
முடங்கிப் போகுமே.
பயிரிட ஆளில்லாவிட்டால்...
எந்தப் பயிரும் விளையாது.
ஒருவேளை சோற்றுக்கே
வழியில்லாமல் போய்விடும்.


உணவு இல்லாமல் யாரும்
உயிர் வாழ்ந்துவிட முடியாது.

உயிர் வாழ வேண்டுமா?
உணவு வேண்டும்.
உணவு வேண்டுமா?
உழவர் உழவுத்தொழில் செய்திடல்
வேண்டும்.

இல்லறம் துறவறம் என்ற
பாகுபாடு இன்றி அனைவரும்
உயிர் வாழ்வதற்கு அடிப்படையான
தேவை உணவு.

எல்லோரும் விரும்பி உண்ணும்
உணவைத் துறந்து எளிமையான
வாழ்க்கை வாழ்கிறேன் என்று சொல்கிற
துறவியருக்கும் உயிர் வாழ
உணவு தேவை.
அந்த உணவு கிடைக்கவில்லையானால்
அவர்களாலும் அறச்செயல்களில்
தொடர்ந்து நிலைபெற்றிருக்க முடியாது.
காரணம் உயிர் .
அந்த உயிர் உடம்பில் நிலைத்திருக்க
 துறவியாக இருந்தாலும்
உணவு தேவை.

உழுவார் உலகத்தார்க்கு
அச்சாணி என்ற திருவள்ளுவர்
இங்கே  உழவுத்தொழில் 
நடைபெறாமல் போனால் 
அறச் செயல்களும்
நடைபெறாமல் நின்று போய்விடும்
என்கிறார்.


அதனால் உழவுத் தொழில்
முடங்கிப் விட்டால்...
இல்லறமுமில்லை துறவறமுமில்லை
என்பது வள்ளுவர் கருத்து.

English couplet :

"For those who've left what all men love no place is found
when they with folded hands remain who till the ground"


Explanation:

"If the former's hands are slackened, even the ascetic
state will fail"


Transliteration:

Uzhavinaar kaimmatangin illai vizhaivadhooum
Vitttemen paarkkum nilai "

Comments

  1. உலகின் உயிர்நாடியான உழவனைப்பற்றிய அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts