திருமண வாழ்த்து
திருமண வாழ்த்து
" அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
நற்றவம்செய் நல்லறத்தால்
தவமணி லலிதா இணையர்
மடிஅணி செய் மங்கை
ஸ்டெபிதா என்னும் தேவதையே!
இட்ட புகழூர் ஐயா
செல்வின் ஜெயந்தி இணையர்
குலம் வளர் கோமகன்
ஆன்ரூசன் சாமுவேல் என்னும் ஆணழகே!
நன்றென்று இறைவன் நினைத்தார்
இணையானீர் துணையானீர்
என்றென்றும் சொந்தங்கள் மகிழ
சுகவாழ்வு காண்பீர் இறையருளாலே!
கனவினில் மிதந்து காதலில் விழுந்து
இதயத்தில் நுழைந்து பேச்சினைத் துறந்து
புன்னகை புரிந்து புதுமணத் தம்பதியராய்
கவின்மிகு காட்சி கொண்டீர் இன்று!
இல்லறமாம் நல்லறம் செய்திட
எம்வீட்டு மங்கை ஸ்டெபிதாவை
ஆன்ரூசன் இதயத்தில் குடியேற்றி
குலவிளக்காக்காகி பெருமை கொண்டோம்!
கண்ணின் மணியாய் நிழலாய்
சிந்தை ஒன்றாய் சிறந்தாய் என்னும்
பெரும்பேறு கொண்டு பெற்றோர்பேணி
பேர்வாங்கி வாழ்வீர் இணைந்து!
காலமெல்லாம் காதல் செய்து
ஆல்போல் தழைத்து
அறுகுபோல் வேரூன்றி
மூங்கில் போல்
சுற்றம் முசியாமல்
பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ்வீர்
இல்லற இன்பங்களை நுகர்ந்து!
- வாழ்த்தும் உள்ளங்கள்
Comments
Post a Comment