கொல்லான் புலாலை மறுத்தானை....

கொல்லான் புலாலை மறுத்தானை..."கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்"
               குறள் -. 260

கொல்லான் - பிற உயிர்களைக் கொல்லாதவன்
புலால் -இறைச்சி
மறுத்தானை - மறுப்பவனை
கைகூப்பி -கைகளைக் கூப்பி
எல்லா -அனைத்து
உயிரும் - உயிர்களும்
தொழும் -  வணங்கும்உயிர்க்கொலை செய்து அதனால் கிடைக்கும்
இறைச்சியை உண்ண மறுப்பவனை
 எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

விளக்கம்:

உயிர்களைக் கொன்று கிடைக்கும்
இறைச்சியை வேண்டாம் என்று
ஒருவன் மறுத்துவிட்டால
ஓர் உயிரைக் கொலை செய்த பாவம்
அவனை வந்து சேராது.

இறைச்சி உண்ண மறுத்துவிட்டால்...
உயிர்க்கொலைகள் நடைபெறாது.

 உயிர்கள் பிழைத்துக்
கொள்ளும்.
இவன் கொல்லாமல் இருந்ததால்தானே நான்
உயிர் வாழ்கிறேன் என்ற
நன்றி உணர்வு உயிர்களுக்கு ஏற்படும்.
அந்த நன்றியும் மகிழ்வும்
 நம்மைப் பார்த்து கைகூப்பி வாழ்த்த
வைக்கும்.

அருமையான வாழ்த்து கிடைக்க
வழி சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.

எல்லா உயிர்களும்  உங்களை வாழ்த்த
வேண்டுமா?
அப்படியானால் இறைச்சி உணவை
மறுத்துவிடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

 
English couplet :

"Who slays nought - flesh rejects-his feet before
All living things with clasped hands"


Explanation :

All creatures will join their hands together
and worship him who has never taken away
life, nor eaten flesh.


Transliteration :

Kollaan pulaalai maruththaanaik kaikooppi 
Ellaa uyirum thozhum"

 


 
 
 

Comments

Popular Posts