எதை நோக்கி இந்த ஓட்டம் ?


எதை நோக்கி இந்த ஓட்டம்?



*எதற்காக இந்த ஓட்டம்? 

எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?*

காலையில் கண்விழித்தது முதல் இரவு கண்மூடும் வரை, நம் வாழ்க்கை ஒரு முடிவில்லாத ஓட்டமாகிவிட்டது.

பள்ளி குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அதனால் நாம் எதை அடையப் போகிறோம் என்பதை விடநாம் எவற்றை எல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

முதலாவதாக வெற்றியைத் தேடி நாம் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அடைந்த உயரத்தை பார்க்க கூட நேரமின்றி, அடுத்தவர் உயரத்தை அடைய நினைத்து நமக்கான உயரம்  எது என்பதையே மறந்து போய்விடுகிறோம்.

வெற்றியை  நோக்கிய ஓட்டம்  தவறில்லை. ஆனால், ஒவ்வொரு உயரத்திலும் மனம் நிறைவடையாமல் ஓடினால், வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

வெற்றி என்பது அதிகமாக பெறுவதில் மட்டுமல்ல, பெற்றதில் திருப்தி அடைவதிலும் இருக்கிறது.

இரண்டாவதாக நாம் யாருடைய வாழ்க்கையை வாழ்வதற்காக இப்படி ஓடிக் கொண்டிருக்கிறோம்?

பிறர் வாழ்க்கையை பார்த்தே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறோம்.

பிறர் வெற்றியை அளவுகோலாக வைத்து நம்மை அளக்கும் போது, நம் மகிழ்ச்சி 

தொலைந்துபோய்விடுகிறது.

மரங்களுக்குள் வேறுபாடு உண்டு.மாமரம் மாம்பழம்தான் தர முடியும் . தென்னை தேங்காய்தான் தர முடியும் .

நான் மாங்காய் தருவேன் தேங்காய் தருவேன் என்று மாற்றி யோசிப்பதில்லை.

யோசித்தாலும் அவை சாத்தியப்படப் போவதில்லை.

அது போன்றுதான் மனிதர்களும்.

முந்துவதற்காக ஓடுங்கள், ஆனால் அடுத்தவர்களுக்காக அல்ல. உங்கள் குடும்ப மகிழ்ச்சிக்காக ஓடுங்கள்.

 மூன்றாவதாக பணத்திற்காக ஓடி

ஓடி கடைசியில்  பாசத்தை இழந்து நிற்கிறோம்.

நமது ஓட்டத்தின் மிகப்பெரிய முரண்பாடே இதுதான்.

குடும்பம் மகிழ்ச்சியாக வாழ உழைக்கிறோம், ஆனால் அவர்களுடன் மகிழ்ச்சியாக பேச நேரம் ஒதுக்குவதில்லை.

பணத்திற்காக ஓடுங்கள்,

தப்பில்லை ஆனால் குடும்பத்தின் மகிழ்ச்சியை மறந்துவிடும் அளவிற்கு ஓடாதீர்கள்.

நான்காவதாக காலத்தை வெல்ல நினைத்து காலத்தையே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஓய்வை கூட வீண் என்று நினைக்கிறோம்.

மழையை ரசிப்பது, வானத்தை பார்ப்பது, குழந்தையின் சிரிப்பில் மகிழ்வது, நண்பருடன் தேநீர் அருந்துவது...

போன்ற சின்னச் சின்ன மகிழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. 

காலத்தை பயன்படுத்த ஓடுங்கள், காலத்தை தொலைக்கும் அளவிற்கு ஓடாதீர்கள்.

 ஐந்தாவதாக. நாளை மகிழ்ச்சியாக வாழ வேண்டும்  என்று நினைத்து இன்றைய மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

எதிர்காலம் இன்னும் வரவில்லை, கடந்த காலம் திரும்ப வராது. நம் கையில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே.

நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை நுகருங்கள் .

நாளையை உருவாக்க இன்றைய நாளை இழந்துவிடாதீர்கள்.

ஆறாவதாக. எல்லா ஓட்டமும் வெற்றியை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

வேகமாக ஓடுபவர் வெற்றி பெறுவதில்லை, சரியான திசையில் ஓடுபவரே வெற்றி பெறுகிறார்.

தவறான பாதையில் வேகமாக ஓடினால், இலக்கிலிருந்து இன்னும் தொலைவு தான் செல்வீர்களே தவிர இலங்கைச் சென்று அடைய மாட்டீர்கள்.

ஓடவேண்டுமே என்று தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

ஏழாவதாக அப்படியானால் ஓடுவதை நிறுத்திவிட வேண்டுமா என்ற கேள்வி எழலாம்.

இல்லை.

உங்களை நீங்களே சில கேள்விகள் 

கேட்டுக்கொள்ளுங்கள்.


1. நான் எதை நோக்கி ஓடுகிறேன்?

2. இந்தப் பயணத்தில்

நான்  எதை இழந்து கொண்டிருக்கிறேன்.

பணம் சம்பாதியுங்கள், மனநிறைவையும் சம்பாதியுங்கள். வீடு கட்டுங்கள், அதற்குள் அன்பையும் கட்டுங்கள்.

முடிவுரை:

ஓடுங்கள்! கனவுகளை நோக்கி ஓடுங்கள்.

ஆனால் அன்பு அழைக்கும் போது நின்று கேளுங்கள், உறவுகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.


வாழ்க்கை முடியும் நாளில், "எவ்வளவு தூரம் ஓடினேன்" என்று பெருமைப்பட போகிறீர்களா? அல்லது "எவ்வளவு அன்பு செலுத்தினேன்" என்று மனநிறைவு அடைய போகிறீர்களா?

*ஓட்டத்தின் வேகத்தை விட வாழ்க்கையின் அர்த்தம் பெரிது.*

ஓடுங்கள்...

வாழ்க்கையை வெல்ல ஓடுங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அல்ல ;வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துகொண்டு!



கருத்துகள்

Popular Posts