மௌனியாய் நிற்கிறேன்
மௌனியாய் நிற்கிறேன்
என்னடா உலகம் இது
யாரிடம் போய் புலம்புவது
தடையோட்ட பந்தயத்தில்
தடுமாறி விழும்
வீரனைப்போல்
நிலைகுலைந்து போகின்றேன்
அடுத்தது என்னவெனத் தெரியாமல்
மௌனியாய் நிற்கின்றேன்!
நாளொரு அறிவுரையும்
பொழுதொரு அறிவிப்பும்
புரியாது விழிக்கின்றேன்
நாளைய பொழுதாவது
நல்லதாய் விடியட்டும்
இறைவா உன்னை வேண்டுகின்றேன்
அடுத்து என்னவெனத் தெரியாமல்
மௌனியாய் நிற்கின்றேன்!
தொடாமல் விலகிடவே
படாதபாடு படுகின்றேன்
தொட்டுவிட்ட பாத்திரத்தை
எட்டுமுறை கழுவியதால்
தொட்ட கை புண்பட்டு போக
மருந்தகம் நோக்கி ஓடுகின்றேன்
அடுத்து என்னவெனத் தெரியாமல்
மௌனியாய் நிற்கின்றேன்!
மூவடி தொலைவில் இருந்து
முழுநேரம் தொலைக்காட்சி பார்த்து
முடங்கியே கிடக்கிறேன்
மூவேழு நாட்களுக்குள்
முடித்திடு தலைவா
தொடர்கதை ஆக்கிடாதே இறைவா
அடுத்து என்னவெனத் தெரியாமல்
மௌனியாய் நிற்கிறேன் !
Your timely Kavitha is admirable
ReplyDelete