ஆகூழால் தோன்றும் அசைவின்மை....

ஆகூழால் தோன்றும் அசைவின்மை....


"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி"

                          குறள் : 371

ஆகூழால்- ஆகுவதற்கு உரிய ஊழால்

தோன்றும்- பிறக்கும்

அசைவு -  சோம்பல்

இன்மை - இல்லாதிருத்தல்

கைப்பொருள் - கையில் இருக்கும் செல்வம்

போகூழால் - போகச் சொல்வதற்கான ஊழால்

தோன்றும் - உண்டாகும்

மடி - சோம்பல்


ஆக்கத்திற்னான ஊழால்
சோம்பலில்லா முயற்சி உண்டாகும்.
கையில் இருக்கும் செல்வம்
நீக்குவதற்கு காரணமான ஊழால் சோம்பல் 
ஏற்படும்.

விளக்கம் :

ஒருவனுக்கு முயற்சி செய்து
பொருள் தேட வேண்டும்
என்ற ஊக்கம் எப்போது
உண்டாகும் என்றால் அதற்கான ஊழ்
அவனுக்குச் சாதகமாக
இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அவனுடைய செல்வம் முழுவதும்
அவரைவிட்டு நீங்க வேண்டும் என்றால்
சோம்பல் என்னும் ஊழ் வந்து
குடியேறிவிடும்.
ஒருவனுடைய வளர்ச்சிக்கும்
தளர்ச்சிக்கும் ஊழ்தான் காரணம்
இதுதான் குறள் கூறும் செய்தி.

அந்த இப் என்பது என்ன?
இதில் இருவேறு கருத்துகள் உண்டு
விதி என்பர் ஒரு சாரார்.
மற்றொரு  சாராரோ விதி என்று
ஏதுமில்லை சூழல் என்று 
பொருள் கொள்ளுதல்தான் சரி
என்பர்.

அதனால்தான் ஊழ் என்பதை விதி என்று
எடுத்துக்கொள்ள வேண்டாம்
சூழல் என்று எடுத்துக் கொள்ளலாம்
என்கின்றனர்.
இதில் பலருக்கு உடன்பாடு உண்டு.
அதாவது ஆகூழ் என்றால்
ஆக்கத்திற்கு உகந்த சூழல்
ஏற்படும்போது ஊக்கம் ஏற்படும்.
ஊக்கம் இருந்தால் ஆக்கம்
ஏற்படுவது இயல்பு.
அதாவது செல்வம் வந்து குவியும்.
போகூழ் என்றால் செல்வம் நம்மைவிட்டு
நீங்கும் காலத்தில் போகூழ் எனப்படும்
சோம்பல் வந்து சேரும்.
சோம்பல் வந்தால் வறுமை 
வாசல் கதவைத் தட்டும்.
இருப்பதும் இல்லாமல் போய்விடும்.
இப்படி எடுத்துக் கொள்வதுதான்
சிறப்பு .

ஆகூழால்  செல்வம் பெருகும்.
போகூழால் இல்லாமை ஏற்படும்.

English couplet:


"Wealth giving fate power of unflinching effort brings,
From fate that takes away idle remissness springs"


Explanation:

Preservation comes from a prosperous fate
and idleness from an adverse fate.

Transliteration:

"Aakoozhaal Thondrum Asaivinmai kaipporul
Pokoozhaai Thondrum mati"













Comments