உடம்பொடு உயிரிடை என்ன....

உடம்பொடு உயிரிடை என்ன....


"உடம்பொடு உயிரிடை என்னமற்று  அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
              குறள் :  1122

உடம்பொடு- உடம்புடன்
உயிரிடை -உயிருக்கான
என்ன - எத்தன்மையது
அன்ன - அத்தன்மையது
மடந்தையொடு - மங்கையோடு
எம்மிடை -எங்களுக்கிடையிலான
நட்பு - உறவு



எனக்கும் என் தலைவிக்குமான நட்பு
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு 
எத்தகையதோ அத்தன்மையது.

விளக்கம் :


அவளில்லாமல் என்னால் உயிர்வாழ
முடியாது.
எனக்கும் என் காதலிக்கும்
இடையிலான நட்பு எத்தகையது
தெரியுமா?
உடம்புக்கும் உயிருக்கும்
இடையினலான நட்பு 
எத்தகையதோ அத்தகைய நட்பு
எங்கள் நட்பு.


உயிர் பிரிந்தால் உடல் இருந்தும்
இல்லாததாகிவிடும்.
எனக்கு என் காதலி உயிர்
போன்றவள். அவளுக்கு நான்
உயிர் போன்றவன்.
உடலொடு உயிராய் இணைந்து
விட்டோம். இனி எங்களுக்குள்
பிரிவு இல்லை. 
பிரிந்தால் எங்களால் உயிர் வாழமுடியாது


உடலும் உயிரும் 
சார்ந்திருக்கும் போதுதான்
அந்த வாழ்வில் உயிர்ப்பு உண்டு.
அவளும் நானும் சேர்ந்திருந்தால் தான் 
எங்கள் வாழ்வு
உயிர்ப்புடையதாக இருக்கும்.
மனம் இணைந்த நட்பு 
என்பதை வெளிப்படுத்தவே
உடலுக்கும் உயிருக்குமான
 உறவு இங்கு உவமையாக
கையாளப்பட்டுள்ளது.

காதல் கொண்டோர் 
நண்பர்களாக வாழ்வர்.
அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்காது.
எந்தவிதப் பாகுபாடும் கிடையாது
அதனால்தான் வள்ளுவர் 
இவர்கள் காதலை நட்பு 
என்றும் சொல்கிறார்.


"பிரியேன்: பிரிந்தால்
உயிர் தரியேன்  "என்ற மனநிலையில்
தலைவன் இருக்கிறான் என்பதைத்தான்
இம்மங்கையோடு யான் கொண்ட நட்பானது
உடலுக்கும் உயிருக்குமான நட்பு போன்றது"
என்று சொல்ல வைத்துப்
புரிய வைத்திருக்கிறார் வள்ளுவர்.


 English couplet :

Between this maid and me the friendship kind is 
as the bonds that soul andbody bind"
.

Explanation :

"The love between me and the damsel is
like the union of body and soul"


Transliteration:

"Utampodu uyiritai Ennamar tanna
Matandhaiyotu emmitai natpu"

Comments

Popular Posts