மரபுப் பெயர்கள்

மரபுப் பெயர்கள் 


தொன்றுதொட்டு ஒரு பொருளை
எச்சொல்லால் நம் முன்னோர் வழங்கிய
வந்தனரோ அவ்வாறே வழங்கப்பட்டு வரும்
சொற்கள் மரபுச் சொற்கள் அல்லது
மரபுப் பெயர்கள் எனப்படும்.


தென்னங்கீற்று என்று சொல்லுவோம்.
தென்னம் இலை என்று சொல்வதில்லை.

ஆட்டுக்குட்டி என்று
சொல்வோம்.
ஆட்டுப் பிள்ளை என்று சொல்வதில்லை.

பனை வடலி என்றுதான் சொல்வோம்.
பனங்கன்று என்று எழுதுவதில்லை.

தென்னம் பிள்ளை என்று சொல்வோம்.
தென்னங்கன்று என்று சொல்வதில்லை.


தென்னந்தோப்பு என்று சொல்வோம்.

தென்னந் கூட்டம் என்று சொல்வதில்லை.


வாழை குலை என்று சொல்வோம்.
மாங்குலை என்று சொல்வதில்லை.

கொத்துக் கொத்தாக மாங்காய் காய்த்துக்
கிடக்கின்றன என்றுதான் சொல்வோம்.
குலை குலையாக மாங்காய் காய்க்கும்
கிடக்கின்றன என்று சொல்ல மாட்டோம்.


காகம் கரையும் என்று சொல்வோம்.
காகம் கூவும் என்று சொல்வதில்லை.
குயில் கூவும் என்றுதான் சொல்லுவோம்.

கோழிப்பண்ணை என்றுதான் எழுதுவோம்.
கோழித் தொழுவம் என்று எழுதுவதில்லை.

மாட்டுத் தொழுவம் என்றுதான் சொல்வோம்.
எழுதுவோம்.
இதுதான் மரபு.



ஒலி மரபுச் சொற்கள் பற்றி பார்ப்போம்.


குயில்   -கூவும்
காகம்  -கரையும்

கிளி -பேசும்
எலி -கீச்சிடும்

சிங்கம் - கர்ஜிக்கும்
புலி - உறுமும்

குதிரை கனைக்கும்
கழுதை கத்தும்

கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்

நாய் குரைக்கும்
நரி ஊளையிடும்.

மயில் அகவும்
யானை பிளிறும்

ஆந்தை அலறும்
தேவாங்கு அழும்

வானம்பாடி பாடும்
தவளை கத்தும்

பசு - கதறும்
காளை முக்காரமிடும்

வண்டு -முரலும் 
கூகை- குழறும்

பன்றி உறுமும்
குரங்கு - அலப்பும்

பசு -கதறும்
புறா- குனுகும்


இளமைப் பெயர்கள் 

சிங்கம் - சிங்கக் குருளை

நாய் -  நாய்க்குட்டி

புலி- புலிப்பறழ்

அணில் - அணிற்பிள்ளை

கீரி - கீரிப்பிள்ளை

தவளை - குஞ்சு

மான் - குட்டி

புலி.   -  குட்டி,. குருளை 

தென்னை - தென்னம் பிள்ளை
                          தென்னங்கன்று

நெல் - நாற்று

ஆடு - மறி

கீரி -  பிள்ளை

குதிரை - குட்டி


விரை மரபுச் சொற்களும் உண்டு.

பூ ஒடித்தாள் என்று
சொல்ல மாட்டோம்.
பூ- பறித்தாள்
என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத வேண்டும்.
மரத்தை வெட்டினார்.

தண்ணீர் குடித்தார்.

சோறு உண்டார்.

ஆடை நெய்தார்.

கூடை முடைந்தார்

பானை வனைந்தார்.

பாட்டுப் பாடினார்

குழல் ஊதினான்.

ஆடு மேய்த்தார்.

நடனம் ஆடினார்.

நாடகம் நடித்தார்.

இட்லி அவித்தார்.

இன்னும் வரும்....



















Comments

Popular Posts