வாய்மை எனப்படுவது யாதெனின்....

வாய்மை எனப்படுவது யாதெனின்...


"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் "

                           குறள் : 291

வாய்மை- உண்மை
எனப்படுவது- என்று சொல்லப்படுவது
யாதெனின்-எது என்றால்
யாதொன்றும்- எதுவாயினும்
தீமை- கெடுதல்
இலாத -இல்லாதவற்றை
சொலல்- சொல்லுதல்


வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால்
யாருக்கும் எந்த இடத்திலும் தீங்கு தராதவற்றைச்
சொல்லுதல் ஆகும்.


விளக்கம் :

உண்மை என்று சொல்லப்படுவது
என்னவென்றால் யாரையும்
எந்த இடத்திலும் காயப்படுத்தாத
சொல்லாக இருக்கவேண்டும்.
நமது சொல்லால் எந்த ஒரு உயிரும்
காயப்பட்டு விடுமானால் நமது சொல்லில்
மெய்ம்மை இல்லை என்று ஆகிவிடும்.
நாம் சொல்லும் சொற்கள் 
பிறர்க்குத் தீமை விளைவிக்காததாக
இருந்தால் அதுதான் வாய்மை.
உண்மை பேசுகிறேன் என்று
சிலர் பேசும் சொற்கள் பிறரைக்
காயப்படுத்தலாம்.இந்த சொற்கள்
வாய்மை என்ற அகராதியில் வராது.
தன் உள்ளம் அறிந்தவரை
பிறர்க்குக் கேடில்லா மொழி.
நன்மை பயக்கும் மொழி.
எல்லா இடத்தும் எல்லா நேரங்களிலும்
இடர் உண்டாக்காத மொழி.
அதுவே வாய்மை எனப்படும்
என்கிறார் வள்ளுவர்.
உள்ளதைச் சொல்லுதல் தானே
வாய்மையாக இருக்க வேண்டும்
என்பீர்கள்.
நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே
சொல்லும்போது அதனால்
தீமை பயக்காதிருந்தால் மட்டுமே
அது வாய்மை.
அப்படியில்லாது தீமை பயக்குமானால்
அது பொய்ம்மை ஆகிவிடும்
என்று வாய்மைக்குப் புதிய இலக்கணம்
தருகிறார் வள்ளுவர்.

இப்போது வாய்மை எப்போது கூற வேண்டும்?
என்ற கேள்வி எழலாம்.
உள்ளதை உள்ளவாறே கூறும்போது
தீமை ஏற்படாதிருந்தால் மட்டுமே
உள்ளவாறு கூற வேண்டும்.
தீமைவிளையுமானால் உள்ளதைக்
கூறாதிருப்பது ஒன்றும் பெரிய தவறு
அல்ல.உண்மைக்கு சரியான
பொருள் தீமை அலாதன சொல்ல்
என்பது மட்டுமே
என்பது வள்ளுவர் கருத்து


English couplet:

"You ask, in lips of men what' truth' may be, T'is speech
from every taint of evil free"


Explanation:

Truth is the speaking of such words as are free
from the least degree of evil to others.

Transliteration:

"Vaaimai Enappatuvadhu yaadhenin yaadhondrum
Theemai llaadha solal"










Comments

Popular Posts