பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
மொக்கவிழ் மலரன்ன சிரிப்பு
பக்கல் ஈர்க்கும் வனப்பு
எல்லை வகுத்திடா நட்பு
கள்ளமில்லா நாவசைப்பு
கிறிஸ்டி என்பதென் கணிப்பு
கதிரவனுக்கு இன்று களிப்பு
காரணம் கிறிஸ்டியின் பிறப்பு
நாள் இன்றென அழைப்பு
தந்தது பெருங்களிப்பு
சொற்களின் அணி வகுப்பு
தோரணம் கட்டிய கவித்தொகுப்பு
கரங்களில் தந்தேன் பேருவப்பு
நித்தம் உன்றன் நினைப்பு
நெஞ்சில் குடியிருக்கும் நட்பு
வானன்ன நெடிய புகழ் கண்டு
நிலனன்ன நெடுநாள் நிலைத்து
மலரன்ன மகிழ்மணம் தந்து
வாழ இறையருள் உண்டு
வாழ்க ...பல்லாண்டு...
பல்லாண்டு...
பல்லாயிரம் ஆண்டு
எம் உள்ளங்களை ஆண்டு!
Comments
Post a Comment