பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
ஆசிரியருள் மாணிக்கமாய்
அனைவரின் அன்புக்குரியோனாய்
மாணவரின் கனவு நாயகனாய்
மாண்பமை மதியாளனாய்
மட்டில்லா மொழியறிவாளனாய்
தெற்றில்லா தமிழ்க்களனாய்
வெற்றுமொழி பேசா ஞானியாய்
தேய்வில்லா மதியாளரானாய் வாழும்
செல்வகணேசன் செவியில் கவியோதி
செந்தமிழில் வாழ்த்துரைக்க
கற்றோர் கரம் கூப்பி
வரிசையில் காத்திருக்க
தொன்மை புகழ் பண்ணையூராருக்கு
வாழ்த்துப்பா என் கைசுமக்க
நெடும்புனல் நன்னீர் தரு
இனிமை நுகர்ந்து
ஆழ்கடல் அலைகுவி
மணலினும் மிக்க நாட்கள்
வாழ்ந்தின்பம் காண வாழ்த்துகிறேன் மகிழ்ந்து
வாழ்க !இன்றுபோல் என்றும்
மகிழ்ச்சிக் கடலில் நனைந்து!
Comments
Post a Comment