பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து
வான்மகள் கடைக்கண் திறப்பால்
நிலமகள் கொண்ட தணுப்பால்
உழவன் செய்த உழைப்பால்
கழனி எங்கும் பயிர் வனப்பால்
கதிர்கள் கண்ட மலைப்பால்
தைமகள் வந்தாள் பூரிப்பால்
தையல் உள்ளம் உவப்பால்
மையல் கொண்ட நினைப்பால்
சுனையாகும் இன்பத் திருப்பால்
மனையில் ஓடும் மகிழ்ச்சிப்பால்
சொல்லரும் பொருட் குவிப்பால்
நல்லறம் நடக்கட்டும் பேரன்பால்
பழையன மறவாப் பண்பால்
பண்பாடு போற்றும் சிறப்பால்
தமிழ்ப்பால் கொண்ட விருப்பால்
அறத்துப்பால் மீதுள்ள ஈர்ப்பால்
பொருட்பால் கிடைத்த மலைப்பால்
இன்பத்துப்பால் நடக்கும் உள்ளன்பால்
சுவை தரு செங்கரும்பால்
வளை கதிர் நிறைப்பால்
மஞ்சள் குலை வனப்பால்
மங்கலம் காணும் சிறப்பால்
கருத்துகள்
கருத்துரையிடுக