பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து


ஆசிரியருள் மாணிக்கமாய்
அனைவரின் அன்புக்குரியோனாய்

மாணவரின் கனவு நாயகனாய்
மாண்புநிறை பேரறம் கொண்டோனாய்

மட்டில்லா மொழியறிவாளனாய்
தெற்றில்லா தமிழ்க்களனாய்

வெற்றுமொழி பேசா ஞானியாய்
தேய்வில்லா மதியாளராளராய்

அறப்பணியொடு அருட்பணியாற்றும்
அய்யா ஜெபமணிக்கு வாழ்த்துரைக்க

கற்றோரும் ஆன்மீக பெரியோரும்  
காலை முதல் காத்திருக்க

வெற்றுக் கவியொன்று புனைந்து
நெஞ்சில் அன்பைச் சுமந்து வாழ்த்துகிறேன்!

நெடும்புனல் நன்னீர் தரு
இனிமை நாளும் நுகர்ந்து

வானும் நிலனும்போல
வாழ்ந்தின்பம் காண்பீர் பல்லாண்டு

பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
எம் உள்ளங்களை ஆண்டு!

Comments