திண்தேர் வளவன்

திண்தேர் வளவன்



சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ‘திண்தேர் வளவன்’ என்று போற்றப்படுகிறான். 

திண்தேர் வளவன் என்றால்

தேர்மேல் இருந்து வலிமையாகத் தாக்க வல்லவன் என்பது பொருள். 


அத்துடன் இவனிடம்  பெரும் படையும் இருந்தது.


தா என்று சொன்னால் மறுக்காமல் வழங்கும் 

வலிமை மிக்க இவனுக்கு எதிரில் நின்று உயிர் வாங்கும் கூற்றுவன் தாக்கி இவன் உயிரை வாங்கிவிட முடியாது. 


இந்த வளவன் பாடுபவர்களுக்கெல்லாம் வாரி வழங்குபவன். 

இதனை அறிந்த கூற்றுவன் இவருக்கு முன்னே கைகூப்பித் தொழுது நின்று ‘உன் உயிரைத் தா’ என்று பிச்சையாகக் கேட்டால் மறுப்பு கூறாது கூற்றுவனுக்கு தன் உயிரையும் கொடுத்துவிடுவான் வளவன். 

அவனைப் பற்றிய பாடல் இதோ உங்களுக்காக...

"செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,

உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ;

பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,

இரந்தன்று ஆகல் வேண்டும் பொலந் தார்

மண்டு அமர் கடக்கும் தானைத்

திண் தேர் வளவற் கொண்ட கூற்றே."


கூற்றுவன்  கால இறுதியில்  எல்லா  உயிரையும் எளிதில் எடுத்துவிடுவான்.

ஆனால்  அவனாலும் எளிதில் எடுத்துவிட முடியாத ஓர் உயிர் உண்டு..

யார் அவன் யார் அவன்....கூற்றுவனாலேயும் கவர்ந்து செல்ல முடியாத அளவுக்கு நெஞ்சுரம் கொண்டவன் யாரவன்  அறிந்திட ஆவல்

மேலிடுகிறதல்லவா?

 கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன்

உயிரை யாராலும் எளிதில் எடுத்திட முடியாது. 

கிள்ளி வளவன் மீது பகை கொண்டாலும்

சினம் கொண்டாலும்

அவனிடமிருந்து பிழைத்தல் அரிது.

பாடுநர் போல வந்து தொழுது அவனிடம் கொடைப் பொருளாக வேண்டுமானால் அவன் உயிரைப் பெறலாம். அதனால் பொன்னால் செய்த மாலையையும், போரில் எதிர் நின்று வெல்லும் படையினையும், நல்ல தேரையும் கொண்ட சோழனின் உயிரை கவர்ந்து செல்ல இதைத்தவிர வேறு வழியே இல்லை.

எமனே நெருங்க அஞ்சும் வீரமுடையவன் சோழன் .பாடுநர் போல வணங்கிக் கேட்டால் தன் உயிரைக் கூடத் தந்து விடுவான்.

ஆமாம் . தா என்று கேட்டால் பொருளை அல்ல...தன் உயிரையே தந்துவிடுவான் இந்தக் கிள்ளி வளவன். 

இப்பாடலில் வளவனின் வீரத்தையும், கொடையையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதே புலவரின் நோக்கம். அதற்கு மக்கள் அஞ்சும் உயர் குறியீடாகவுள்ள கூற்றுவனை எடுத்துக்கொண்டார்.


கூற்றுவனே அஞ்சுவான் என்றால்

அவனை எதிர்த்து நின்று வெல்ல

துணிச்சல் உள்ளவர் எவரோ என்ற கேள்வியை எழுப்ப வைத்து

திண்தேர் வளவன் என்ற

சோழ மன்னனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.

Comments

  1. கட்டுரை வாயிலாக திண்தேர் வளவனை காட்சி படுத்தியது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment