பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

தத்தை மொழி  கற்றலா(ல்)
ஒற்றைச் சொல்லில்- கைபேசி
ஓயாது பிறந்தநாள் வாழ்த்துப் பாடலா!

மிஞ்சும் அன்பு நின்மொழியிலா
விஞ்சும் மதியிலா பேச்சிலா
கஞ்சமில்லா அன்பு பாராட்டலிலா!

கரையிலா நட்பு பேணலா(ல்) -என்றும்
கறையிலா உள்ளம் நினதாதலா
வரையிலா அன்பு அரசாட்சி நடத்தலா!

கண்டுலா  வந்திட விழைதலா(ல்)
கவியோலை ஏந்தி ஐயாவின் இல்லம்
வந்தேன் இன்பச் சிற்றுலா!

வானும் நிலனும் போல
வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு
இன்றுபோல என்றும் உவந்து!

                   - செல்வபாய் ஜெயராஜ் 🎈🎈🎈🎈🎈

கருத்துகள்

Popular Posts