துள்ளாத மனமும் துள்ளும்
துள்ளாத மனமும் துள்ளும்...(ராகம்)
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - மனம்
இன்பத் தேனையும் வெல்லும்
(துள்ளாத)....2
மலரும் நினைவு மனதில் வந்து
மகிழ்ச்சி பொங்கும் உள்ளம்
அன்பு கொண்ட கண்கள் இங்கே
ஆயிரம் கதைகள் சொல்லும்
நட்பைக் கண்கள் காணும் போது
அணைக்க கரங்கள் நீளும்
அன்புக் குரலில் இனிமை கலந்தே-மனம்
அழகுத் தமிழில் கொஞ்சும்
(துள்ளாத)....1
எங்கோ இருந்த நம்மை ஒன்றாய்
கூட வைத்தது பாசம்
என்றன் நினைவில் உந்தன் நினைவை
இணைத்து நின்றதும் நேசம்
எங்கும் இருக்கும் இதயங்களையும்
இணைத்து வைப்பதும் தெய்வம்
இணைந்தே பாடுவோம் நாமும்- இனி
கவலை மறப்போம் நாளும்
(துள்ளாத)...1
பிரிந்த உறவை அருகில் கண்டால்
பிள்ளையாய் மனம் துள்ளும்
சோர்ந்த நாளும் மாயம் ஆகும்
ஓடி அணைத்தே மகிழும்
நல்ல இதயம் நட்பைத் தேடி
நாடி நாளும் ஓடும்
உண்மை அன்பால் இணையும் -உள்ளம்
உறவாய் என்றும் நிலைக்கும்
(துள்ளாத).....2
.
கருத்துகள்
கருத்துரையிடுக