விருது வழங்கும் விழா
விருது வழங்கும் விழா
மாதுங்கா பள்ளிக்கு அகவை நூறு
வாழ்த்துச் செய்தியோடு மெல்ல எட்டிப்பார்க்க
உதடுகள் மெல்லச் சிரிக்க
'வாங்க ' குரல் தேனாய் இனிக்க
கண்கள் ஆலாய்ப் பறக்க
காட்சிகள் வியக்க வைக்க
பதாகை விரிய விழா தொடங்க
வரவேற்புரையால் ஜெரோம் ஆசிரியர்
செவிப்பறையைச் சிலிர்க்க வைக்க
ஆசிரியர் பாலன் அவர்கள்
தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க
ஆசிரியை அனிதாவின் அன்பியல் பேச்சு
எதிர்பார்ப்பை எகிற வைக்க
தலைமை ஆசிரியை சந்திரிகா அவர்களின்
பாட்டிடையிட்ட உரை நெஞ்சை அள்ள
தலைமை ஆசிரியை ஞானம் அவர்களின்
உரையிடையிட்ட கவிதை
உள்ளத்தை அள்ள
தலைமைஆசிரியைகள் மதுரம் மற்றும்
லீலா ஸ்டீபன் அவர்களின்
வாழ்த்துரைகளைக் கேட்டு மனம் துள்ள
வில்லியம் ஆசிரியர் அவர்கள்
மருத்துவ உரை மெய்மறக்க வைக்க
அரங்கில் அதிர்வலை மிகுக்க
உள்ளீடாய்ப் போட்டிகள் வந்து
உவகையைக் கூட்டி நிற்க
பரிசு பெற்றவர்கள் கால்கள்
தரையில் ஊன்ற மறுத்துத் துள்ள
வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள்
முகம் வாட
மறுவாய்ப்பு கிடைக்குமென
மனம் தேறுதல் கொள்ள
உற்சாகக் கரவொலி வந்து
இடைமறிக்க
விருது பெறுவோர்க்கான அணிவகுப்பு விழாவுக்கு அணி சேர்க்க
ஆசிரியர் அறிமுகவுரையில்
அனிதாவின் அன்பிழைக்குரல்
அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்க
விருது வாங்கியவர்கள்
கண்கள் பனிக்க
உதடுகளில் மகிழ்ச்சி துளிர்க்க
விருது வழங்கும் விழாவின்
பெருமைமிகு தருணம் இதுவல்லவோ
என்று மெய்மறக்க
உறவுகள் பார்த்திருக்க
நெஞ்சம் விம்ம
கைகள் விருதினைத் தழுவ
கண்கொள்ளாக் காட்சியை
அரங்கேற்றிக் கொண்டிருந்தது அரங்கம்
குழுமத்தில் உதவித்தொகைப் பெற வந்த
மாணவனைக் கண்டு உள்ளம்
உறைந்து
கண்கள் பனித்தது
பாலபாரதி புத்தக சிறப்பு அதிகாரி
துல்சி பாரதி மேடம் அவர்களைப் பாராட்டி பூங்கொத்தும் சால்வையும் பெற்றிட
ஆசிரியைகள் சித்ரா மற்றும்
மரிய வசந்தாவை ஒருங்கிணைப்பாளர் அழைத்து பாராட்டுச் செய்தியைப்
பரிமாறிக்கொண்டது
குழுமத்துச் செவ்விய
செயல்பாட்டுக்குச்
சான்றாய் அமைந்தது
டெல்லிவரை சென்று தமிழ்பள்ளிக்கு பெருமை சேர்த்து வந்த
ஆசிரியையும் மறக்காமல்
சிறப்பு செய்து அசத்தி நின்றது குழுமம்
குழுமப் பணிகளின் தூண்களில்
ஒன்றாய் நின்றிருக்கும் முத்தையா
ஆசிரியர் அவர்களுக்கும்
குழுமத்தலைவி
பாராட்டுப் பத்திரம் வாசிக்க
அனைவரின் கண்களும்
ஆசிரியரைத் தேடி
அலைமோதியது ஒரு
நெகிழ்ச்சியான தருணம்
சிறப்பு விருந்தினர் அமலா ஸ்டாலின்
அவர்கள் உரையில்
இருக்கிறவராய்
இருக்கிறவர் ஆசிரியர் என்று
ஆசிரியர்க்கு
மகுடம் சூட்டி அழகு பார்த்தது
உள்ளத்தை ஈர்த்தது
ஊக்கம் தந்தது
பேசுபொருளாகியது
ஆசிரியர் ஸ்டீபன் அவர்கள்
மருத்துவ காப்பீடு பெற
ஓய்வூதியதார்கள் ஒற்றிணையுங்கள்
என்று சிறப்பு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தது
சிந்திக்க வைத்தது
சிந்தனையைத் தட்டி எழுப்பியது
மாதுங்கா பள்ளி பொறுப்பாசிரியர் சித்ராவிற்கு நெஞ்சம் நிறைந்த
நன்றியைச் சமர்ப்பிக்க
தேசிய கீதத்தோடு விழா
இனிதே நிறைவடைந்தது
இந்தச் சுவை போதுமா
இன்னும் கொஞ்சம் வேண்டுமா
என்று
அறுசுவை உணவின் மணம்
நாசியைத் தட்டி எழுப்ப
கை தானாய் வட்டிலை எடுக்க
வாய்க்கும் கைக்கும்
போட்டி நடைபெற
வயிறு வெற்றியைத் தட்டிச் செல்ல
அரங்கம் கலகலக்க
சந்திரிகா ஆசிரியை மறுபடியும்
துள்ளாத மனமும் துள்ளும் என்று
துள்ளலிசையோடு
அனைவரையும் துள்ள வைக்க
இசையோடு
இசைய வைத்த விழாகியது
விருது வழங்கும் விழா
"அங்கீகாரம், இணைப்பு,
ஊக்கப்படுத்தல் என்ற மூன்றையும்
உள்ளடக்கியதாக விருது
வழங்கும் விழா இருக்க வேண்டும் "
என்ற இலக்கணத்திற்கு
ஏற்ப விருது வழங்கும்
விழாவை நடத்தி மெச்ச வைத்த
விழாக் குழுவினரை
ஆயிரம் முறை பாராட்டி
இன்னொரு விழாவிற்கு வரும்வரை
நினைவில் நிலைத்திருப்போம்
உணர்வில் உவந்திருப்போம்
களித்திருப்போம்
என்றுகூறி
நெஞ்சை மட்டுங்காவில்
தொலைத்துவிட்டு
விடைபெற மனமில்லாது
விடைபெற்று வந்தோம்
தமிழாசிரிய குழுமத்திற்குப்
பாராட்டுக்களும்
நனிநன்றியும்
நல்வாழ்த்தும் உரித்தாகுக
கருத்துகள்
கருத்துரையிடுக